குறி வச்சா இரை விழணும்.. வைரலாகும் தலைவர் 170 டீசர்

தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
குறி வச்சா இரை விழணும்.. வைரலாகும்  தலைவர் 170 டீசர்
Published on

ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படம் திரைக்கு வந்ததும் இமயமலைக்கு சென்று கோவில்களில் தரிசித்துவிட்டு திரும்பி இருக்கிறார். அடுத்த புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இது ரஜினிக்கு 170-வது படம். சூர்யாவை வைத்து 'ஜெய்பீம்' படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தது. தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது.

இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தலைவர் 170 படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், தலைவர் 170 பெயரில் உருவாகி வந்த படத்துக்கு 'வேட்டையன்' என்று படக்குழு பெயரிட்டுள்ளது. மேலும் பட தலைப்புடன் படக்குழு டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com