என் மலர்

  நீங்கள் தேடியது "Amala"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கு, இந்தி, மலையாளம் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை அமலா, தமிழில் நடிக்காததற்கு காரணம் சொல்லியிருக்கிறார்.
  நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்ட அமலா அதற்கு பின் தமிழ் சினிமாவில் அதிகம் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். மற்ற மொழிகளில் நடிப்பவர் தமிழில் நடிக்காததற்கான காரணத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

  ’காரணம் எதுவும் இல்லை. வருடத்துக்கு ஒரு படமாவது தெலுங்கு, இந்தி, மலையாளம்னு நடிச்சுக்கிட்டுதான் இருக்கேன். தமிழ் சினிமா வாய்ப்பு அமையலை, அவ்ளோதான். என் பிரண்ட்ஸ் எல்லோரும் சென்னையில்தான் இருக்காங்க. எங்களுக்குன்னு தனியா ஒரு வாட்ஸப் குரூப் இருக்கு.  தமிழ்நாட்டுல நடக்குற முக்கியமான செய்திகள், தமிழ் சினிமாக்கள் பற்றியெல்லாம் அதுமூலமா தெரிஞ்சுக்குவேன். தவிர, நானும் அடிக்கடி சென்னைக்கு வந்துக்கிட்டு தானே இருக்கேன். வர்றப்போ எல்லாம் தமிழ் படங்களைப் பார்ப்பேன். சமந்தா நடிச்ச ‘சூப்பர் டீலக்ஸ்’ பார்க்கணும்னு நினைச்சேன், இன்னும் பார்க்கல. சீக்கிரமே பார்த்துவிடுவேன்’. இவ்வாறு கூறியுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  90-களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகர்களுடன் நடித்து பின்னர் சினிமாவில் இருந்து விலகிய அமலா, நீண்ட இடைவேளைக்கு பிறகு இணையதொடரின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். #HighPriestess #Amala #Sunaina
  காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சுனைனாவுக்கு வரவேற்பு பெற்றுத்தந்தது வம்சம், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்கள் தான்.

  இதனையடுத்து சமர், தொண்டன் போன்ற படங்களில் நடித்தார். திரைப்படங்களி லிருந்து இணைய தொடர் பக்கம் திரும்பியுள்ள சுனைனாவுக்கு, ஹாரர் திரில்லரில் உருவான ‘நிலா நிலா ஓடிவா’ என்ற வெப் தொடர் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.  தற்போது மற்றுமொரு புதிய தெலுங்கு இணைய தொடரில் நடிக்க சுனைனா ஒப்பந்தமாகியுள்ளார். ஹை பிரீஸ்டஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தொடரை புஷ்பா என்ற பெண் இயக்குநர் இயக்க உள்ளார். இதில் நடிகை அமலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கஉள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை அமலா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனை திருமணம் செய்து கொண்ட பின்னர் திரையுலகில் இருந்து விலகினார். தற்போது இணையதொடர் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். #HighPriestess #Amala #Sunaina

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், நடிப்பதோடு மட்டுமில்லாமல் புதிய தொழிலிலும் ஈடுபட உள்ளார். #AmalaPaul #Amala
  நடிகை அமலாபால் 'அதோ அந்த பறவை போல' என கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும் அவர், அடுத்து சொந்தமாக தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

  ஊட்டச்சத்து தொடர்பான பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான இந்த நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களை அதிக அளவில் பணிகளில் ஈடுபடுத்த உள்ளார்.  சமீபத்தில் கேரள வெள்ளத்தின் போது நேரடியாக சென்று களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்ட அமலாபால் அடுத்து பெண்கள் சுயமுன்னேற்றத்தை கையில் எடுத்திருப்பதற்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமணம் முடிந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், தங்களது திருமண நாளை, இருவரும் குடும்பத்துடன் வெளிநாட்டில் கொண்டாடி உள்ளனர். #Samantha #NagaChaitanya
  தென்னிந்திய சினிமாவின் புதுமண ஜோடியான சமந்தா - நாக சைதன்யாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இதை கொண்டாடும் வகையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் வெளிநாட்டுக்கு சென்றனர். அங்கே சமந்தா கவர்ச்சியான ஆடைகளுடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையானது.

  ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளான நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருமண நாளை மாமனார் நாகார்ஜுனாவின் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.

  குரோஷியாவிலுள்ள டர்போனிக் நகருக்கு தங்கள் முதல் திருமண நாளைக் கொண்டாடச் சென்றிருக்கும் சமந்தா, இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை ஷேர் செய்து “என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறந்தவைகளில், நான் ஒவ்வொரு நாளும் உன்னிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடுகிறேன்.  என்னில் பாதிக்கு முதல் திருமண நாள் வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நாக சைதன்யா” என்று குறிப்பிட்டிருக்கிறார். திருமண நாளினை குரோஷியாவில் கொண்டாட வேண்டும் என்ற முடிவினைத் தாண்டி, அந்தப் பயணத்துக்கு தனியே செல்லாமல் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். #Samantha #NagaChaitanya

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவாகரத்துக்கு பிறகு படங்களில் பிசியாக நடித்து வரும் அமலாபால், எந்த பிரச்சனையாக இருந்தாலும் 2 நாள் தான் என்று கூறியிருக்கிறார். #Amalapaul
  தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் அமலாபால். அவரிடம் காதல், கல்யாணம், விவாகரத்து இவற்றில் இருந்து மீண்டு வந்துவிட்டீர்களா? என்று கேட்டால் ‘இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அது சுத்த பொய்.

  நமக்கென்று ஒரு கனவை தேர்ந்தெடுத்து அதில் கவனமாக இருந்தால் போதும். எல்லா துறைகளிலும் நீடித்து இருந்து சாதனை செய்தவர்களை பார்த்தால் இது புரியும்.  அதற்காக வருத்தமே படாமல் வாழ முடியாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் 2 நாள் துக்கம் அனுபவிச்சுட்டு உடனே வெளியே வந்துவிட வேண்டும். நான் இப்போது முழுக்க சைவத்துக்கு மாறி இருக்கிறேன். இந்த வாழ்க்கை எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும். நமக்கான சரியான பாடத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
  ×