search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ஜி.பி"

    • குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி பாராட்டு தெரிவித்தார்.
    • தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உதவி நிலைய டாக்டர் மனோஜ் குமாரின் கிளினிக் மற்றும் வீடு உள்ளது. பா.ஜ.க. ஆதரவாளரான இவர் தனக்கு சொந்தமான 2 கார்களை கிளினிக் அருகில் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்று விட்டார்.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் முகத்தை மூடியபடி வந்து டாக்டர் மனோஜ்குமாரின் காருக்கு தீ வைத்து விட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அனைவரும் வந்து தீயை அனைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். இதில் முதற்கட்டமாக ராமநாதபுரம் கேணிக்கரையை சேர்ந்த சீனி முகம்மது மகன் அப்துல் ஹக்கீம் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் இப்ராகிம் , அப்துல் அஜிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த ராமநாதபுரம் காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சித்திரவேல் உள்பட 10 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1. லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, சான்றிதழை டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழங்கி பாராட்டினார்.

    அப்போது தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.

    ×