search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் திலீப்"

    மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் மோகன்லால் பொறுப்பேற்றுக் கொண்டார், அத்துடன் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். #AMMA #Mohanlal
    கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக கடந்த 18 ஆண்டுகளாக நடிகர் இன்னசென்ட் எம்.பி. இருந்துவந்தார்.

    இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக இன்னசென்ட் அறிவித்தார். இதை தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடிகர் சங்க கூட்டம் கொச்சியில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் புதிய தலைவராக மோகன்லால் தேர்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளராக இடைவேளை பாபு, துணைச் செயலாளராக நடிகர் சித்திக், பொருளாளராக ஜெகதீஷ் உள்பட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளும் தேர்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் சங்கத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர். 



    பிரபல மலையாள நடிகர் திலீப் நடிகர் சங்கத்தில் பொருளாளராக பதவி வகித்துவந்தார். கடந்த ஆண்டு நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கப்பட்டார்.

    தற்போது கொச்சியில் நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் திலீப் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. நடிகர் சங்க விதிகளுக்கு மாறாக நடிகர் திலீப் நீக்கப்பட்டதாக கூறி அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். #AMMA #Mohanlal

    நடிகை கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பெண் நீதிபதியை நியமிக்க கோரிய நடிகை தரப்பின் கோரிக்கையை, கேரள கோர்ட் நிராகரித்தது. #ActressAbductionCase #Dileep
    கேரளாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகையை கடத்தி சென்றதாக பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று எர்ணாகுளம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைத்து பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    இதனை எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஏற்க மறுத்தார்.

    இதையடுத்து திலீப் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர். இதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என பட்டியலிட்டு கோர்ட்டில் மனு செய்யும் படியும், அதனை பரிசீலித்து கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.



    இது போல நடிகை கடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் தர வேண்டும் என்று நடிகர் திலீப் தரப்பில் மனு செய்யப்பட்டது. இதுகுறித்து நீதிபதி கூறும் போது, குற்றம் சாட்டப்பட்டோர் மற்றும் அவர்களின் வக்கீல் கோர்ட்டு அறையில் வீடியோ ஆதாரங்களை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #ActressAbductionCase #Dileep

    நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிறை சென்று திரும்பிய திலீப், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார். #ActressAbductionCase #Dileep
    பிரபல மலையாள நடிகர் திலீப். கடந்த ஆண்டு நடிகை ஒருவரை கடத்திய வழக்கில் சிறை சென்றார். 83 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.

    கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்த திலீப், அதில் அடுத்து தான் நடிக்கவிருக்கும் `புரபசர் டிங்கன்' படத்துக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறும், சில நிபந்தனைகளை தளர்த்துமாறும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    அந்த மனு விசாரணையில் இருக்கும்போதே நேற்று திடீர் என்று வாபஸ் வாங்கிவிட்டார். அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்பதால் மனுவை திரும்ப பெற்றுவிட்டதாக திலீப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ActressAbductionCase #Dileep
    ×