என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள நடிகை"

    • ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
    • மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.

    பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்துள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது.

    மோகன்லாலின் தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக மீரா உயர்ந்தார்.

    தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

    இவர் 2005இல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் அவரை விவாகரத்து செய்தார். 

    தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.

    ஆனால் அந்த உறவும் நீடிக்காமல் அவரை விவாகரத்து செய்த மீரா, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்துகொண்டார்.

    இந்த நிலையில் மூன்றாவது கணவர் விபினையும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்துள்ளார்.

    "2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிளாகி விட்டேன். என் வாழ்க்கையின் அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் இருக்கிறேன்" என்று மீரா வாசுதேவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. 

    • கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகையை திருமங்கலம் அழைத்து வந்து விசாரிக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • நடிகை மினு கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வரப்படுகிறார்.

    14 வயது சிறுமியை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக கூறி 4 பேர் அத்து மீறியுள்ளனர். இது தொடர்பாக அந்த சிறுமி புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கேரள நடிகை மினு முனீரை சென்னை போலீசார் கேரளாவில் கைது செய்தனர்.

    கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகையை திருமங்கலம் அழைத்து வந்து விசாரிக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி தற்போது நடிகை மினு கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வரப்படுகிறார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால் வழக்கு சென்னை திருமங்கலம் போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மலையாளத்தில் 280-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
    • தமிழில் 12 படங்களில் நடத்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    பார்கின்சன் மற்றும் அல்சைமர் என்ற நரம்பியல் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த பிரபல மலையாள நடிகை கனகலதா காலமானார். அவருக்கு வயது 63.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை கனகலதா. 1960-ம் ஆண்டு பிறந்த இவர், தனது சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்தார். அதன் மூலமாக திரைப்படத்து றைக்கு வந்த அவர், ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

    மலையாளத்தில் 280-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர், தமிழில் 12 படங்களில் நடத்துள்ளார்.

    அது மட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவந்தார். இந்நிலையில் தான் கடந்த 2021-ம் ஆண்டில் அவர் நரம்பியல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவரால் சினிமா மற்றும் டி.வி. சீரியல்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    படுத்தபடுக்கையாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவரை, அவரது சகோதரி விஜயம்மா உடனிருந்து கவனித்தது வந்தார். அவரது மருத்துவ சிகிச்சைக்கு திரைப்பட அகாடமி மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் உதவி வந்தது.

    இந்நிலையில் நடிகை கனகலதா நோய் பாதிப்பு காரணமாக திருவனந்தபுரம் மாவட்டம் மலையின்கீழ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கு மலையாள திரையுலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    • வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பிரபல நடிகர் திலீப்பும் ஒருவர் ஆவார்.
    • 84 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு சினிமா சூட்டிங் முடித்து விட்டு கொச்சியில் இருந்து தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியது.

    மேலும் அந்த காட்சிகளை அந்த கும்பல் வீடியோவும் எடுத்திருக்கிறது. கேரளாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பிரபல நடிகர் திலீப்பும் ஒருவர் ஆவார்.

    நடிகை மீதான பாலியல் தாக்குதல் வழக்கின் முதல் குற்றவாளியாக சுனில்குமார் என்கிற பல்சர் சுனி சேர்க்கப்பட்டிருக்கிறார். வழக்கின் 8-வது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்டார். அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டது. 84 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    நடிகை பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கின் இறுதிக்கக்கட்ட விசாரணை தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியும், நடிகர் திலீப்புக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தவருமான பிரபல இயக்குனர் பால சந்திரகுமார் திடீரென மரணம் அடைந்தார்.

    சிறுநீரகம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், செங்கனூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் தான் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணம் அடைந்திருக்கிறார்.


    நடிகர் திலீப்பும், இயக்குனர் பால சந்திரகுமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அப்படி இருந்த நிலையில் தான் நடிகை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிரான கருத்துக்களை இயக்குனர் பாலசந்திரகுமார் தெரிவித்தார்.

    நடிகை பாலியல் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியை நடிகர் திலீப் வீட்டில் பார்த்ததாகவும், நடிகை தாக்குதலுக்கு உள்ளான வீடியோ காட்சி திலீப்பிடம் இருப்பதாகவும், விசாரணை அதிகாரிகளுக்கு அவர் ஆபத்து ஏற்படுத்த முயன்றதாகவும் பாலசந்திரகுமார் வாக்குமூலம் அளித்தார்.

    அவரது இந்த வாக்கு மூலம் நடிகை பாலியல் தாக்குதல் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் திலீப் மீது கொலைக்கு சதி செய்ததாகவும், சாட்சியங்களை அழித்ததாகவும் வழக்கு பதியப்பட்டது.

    இயக்குனர் பாலசந்திர குமாரின் உடல் செங்கனூர் மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    ×