search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prabhu solomon"

    • இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கியுள்ள செம்பி திரைப்படத்தில் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடித்திருக்கின்றனர்.


    செம்பி

    ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். 'செம்பி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'செம்பி' திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "செம்பி! செல்ஃபி எடுத்து தன்னைத்தானே ரசித்துக் கொள்வதைப் போல,'செம்பி' முழுக்க பிரபு சாலமன் அவர்களின் பேராண்மையை ரசித்தேன்.


    செம்பி

    பெரும் தைரியத்துடன் கதைக்கருவை மட்டுமே நம்பி கோவை சரளா அவர்களையும், ஒரு சிறு பெண்ணையும் மையமாக்கி அதையே மைனாவாக்கி அதேயளவு அழகுணர்ச்சியும், அதிரடி கனெக்ட் செய்யும் கதைக்களமும் ஒரு குற்றத்திற்கு உரிய தீர்ப்பையும் இப்படிக் கூட செயல்படுத்த முடியும் என பிரம்மிப்பில் ஆழ்த்திவிட்டார். ஒளிப்பதிவும் இசைநுட்பமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு சமமாக் வென்றிருக்கிறது. இவ்வளவு விரைவில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் குற்றங்களே குறைந்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.



    பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி-2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் மதியழகனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #Kumki2
    கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 

    படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது..

    படப்பிடிப்பு தற்போது மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த இதயக்கனி படப்பிடிப்பிற்கு பிறகு கும்கி 2 படப்பிடிப்பு தான் அங்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்திற்காக இரண்டு விஷயங்களில் சிரமப்பட்டோம். ஒன்று யானை.. அது கிடைத்து விட்டது. மற்றொன்று படத்தின் நாயகி.. இன்னும் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம். நாயகி இல்லாத காட்சிகளை மட்டுமே தற்போது படமாக்கி வருகிறோம் என்றார் பிரபுசாலமன். இந்த படத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



    இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். #Kumki2 #NivethaPethuraj

    பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி-2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு சிறுவனுக்கும், குட்டி யானைக்கும் இடையேயான நட்பை மையப்படுத்தி தான் இந்த படம் உருவாகி வருவதாக இயக்குநர் கூறியிருக்கிறார். #Kumki #PrabhuSolomon
    கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - லஷ்மி மேனன் நடிப்பில் உருவான `கும்கி' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சாதனை படைத்தது. 

    இந்த நிலையில், கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு முதல் உருவாக்கி வருகிறார் பிரபு சாலமன். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    படம் குறித்து இயக்குநர் பிரபு சாலமன் பேசும் போது, 

    கும்கி படத்திற்கும், கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது என்றார். ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் கும்கி 2 படத்தின் கதையாக உருவாகி வருகிறது.  



    இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் அனுமதி கிடைக்கல, அனுமதி கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக கும்கி 2 இருக்கும்.



    வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்றார் பிரபுசாலமன்.

    இந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். #Kumki #PrabhuSolomon
     
    பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் கும்கி 2 படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. #Kumki2
    பிரபு சாலமன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கும்கி’. இதில் விக்ரம் பிரபு நாயகனாகவும், லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். மேலும், தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, வசூலிலும் சாதனை படைத்தது. 

    தற்போது, இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் பிரபு சாலமன். கடந்த ஆண்டே 2017 ஹீரோ கதாபாத்திரத்தின் சிறு வயது ப்ளாஷ்பேக் காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    மேலும், கேரளாவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் விஷ்ணுவும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. வெகு விரைவில் படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×