என் மலர்
நீங்கள் தேடியது "டி. இமான்"
- மொய் விருந்தை கதைக்கருவாக கொண்ட படம்.
- படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
SK Films International சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சி.ஆர். மணிகண்டன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இப்படத்தின் நாயகனாக ரக்ஷன் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் சி.R.மணிகண்டன் கூறுகையில்..,
"நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் அனைவருக்கும் உதவி கிடைக்கும்.
இது எனக்கு பெரிய ஆச்சர்யத்தை தந்தது. இதை மையமாக வைத்து உருவாகியது தான் இந்தப்படம். அதனால் தான் இந்தப்படத்திற்கு 'மொய் விருந்து' என்று தலைப்பு வைத்துள்ளோம். இது அனைவருக்கும் பிடிக்கும்படியான எளிமையான அழகான ஃபேமிலி டிராமா" என்றார்.
பாலுமகேந்திராவின் "வீடு" படப்புகழ் 'ஊர்வசி' அர்ச்சனா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் ரக்ஷன் மற்றும் ஆயிஷா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். M.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கும்கி, கயல் மற்றும் தொடரி போன்ற வெற்றிப்படங்களை இயக்கினார் பிரபு சாலமன்.
- இப்படத்திற்கு மாம்போ என தலைப்பிட்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு விதார்த் மற்றும் அமலா பால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் மைனா. இப்படத்தை பிரபு சாலமன் இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று பல விருதுகளை குவித்தது. இதற்கு முன் பிரபு சாலமன் கிங், கொக்கி, லீ, லாடம், போன்ற படங்களை இயக்கி இருந்தாலும். மைனா திரைப்படமே தமிழ் திரையுலகை திரும்பி பார்க்கச் செய்தது.
அதற்கடுத்து கும்கி, கயல் மற்றும் தொடரி போன்ற வெற்றிப்படங்களை இயக்கினார். கடைசியாக செம்பி திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் செம்பி மற்றும் அஸ்வின் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் பிரபு சாலமனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மாம்போ என தலைப்பிட்டுள்ளனர். இது ஒரு சிறுவனுக்கும் , சிங்கத்திற்கும் இடையே உள்ள நட்பை பிரதிபளிக்கும் படமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி நடிகராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் உண்மையான சிங்கத்தை வைத்து எந்த வித சி.ஜி காட்சிகளும் இல்லாமல் படமாக்க முயற்சித்துள்ளனர். இதற்காக விஜய் ஸ்ரீ சிங்கக்த்துடன் பயிற்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே உண்மையான சிங்கத்தை வைத்து படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவே ஆகும்.
இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் படத்தின் இசையே மேற்கொள்கிறார். இப்படத்தை காஜா மைதீன் மற்றும் அப்துல் கானி தயாரித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






