என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    காஜல் அகர்வால் தான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களைவிட இனி நடிக்கும் படங்களில் உணர்ச்சிப்பூர்வமாக நடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்
    சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகவே இருக்கிறார். முன்பு பெரும்பாலான படங்களில் நாயகர்களின் காதலியாக வந்த காஜல் இப்போது, முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார்.தமிழில் அஜித்துடன் நடிக்கும் ‘விவேகம்’ தெலுங்கில் ராணாவுடன் நடிக்கும் ‘நேனேராஜு நேனே மந்திரி’ படங்களில் 2 நாயகர்களின் மனைவியாகவும் நடிக்கிறார்.



    இதில் உணர்ச்சிமயமான காட்சிகளில் நடித்து திறமையை காட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காஜல் தனது நண்பர்களிடம் இந்த புதிய பரிமாணத்தை சொல்லி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
    சினிமா தியேட்டர்களில் நீடிக்கும் பார்க்கிங் கட்டணம் பாப்கான், குளிர்பானம் விலைகள் குறையவில்லை ‘காம்போ’ என்ற பெயரில் ரூ.350 வசூல் வேட்டை நடைபெறுகிறது
    சினிமா டிக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்ற செய்தி வெளியானதில் இருந்து சினிமாத்துறையினரும், தியேட்டர் உரிமையாளர்களும் கொதித்து எழுந்துவிட்டனர்.

    ஜி.எஸ்.டி வரி 28 சதவீதம் என்று முதலில் அறிவிப்பு வெளியானது. திரைஉலகினர் எதிர்ப்பதையடுத்து ரூ.100க்கு உட்பட்ட சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீதம் வரி ரூ 100க்கு அதிகமான டிக்கெட்டுக்கு தான் 28 சதவீத வரி என்று மத்திய அரசு மாற்றி அமைத்தது.

    இத்துடன் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் 30 சதவீத வரியை வசூலிக்கலாம் என்று சட்டம் இயற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. பேச்சு வார்த்தைக்குப்பிறகு 30 சதவீத வரி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது பற்றி முடிவு செய்ய இருதரப்பு குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுசெயலாளருமான விஷால்,“ தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ.30 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டும் ஆன்லைன் முன் பதிவு கட்டணத்தை ரூ. 10 ஆக குறைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

    ஒருதிரைப்பட விழாவில் பேசிய விஷால், “ தியேட்டர்களில் தின்பண்டம் விலை, வாகன நிறுத்த கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. இதை குறைத்தாலே தியேட்டர்களுக்கு கூட்டம் அதிகம் வரும். சினிமா தயாரிப்பாளர்களுக்கு உரிய தொகை கிடைக்க வழி ஏற்படும். எனவே, தியேட்டர்களில் தின்பண்டம் மற்ற  விலைகளை குறைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

    ஆனால் சினிமா தியேட்டர்கள் இதை கண்டு கொள்ளவில்லை. ரூ.120 மதிப்புள்ள சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்தால் டிக்கெட் கட்டணம் ரூ.120, ஜி.எஸ்.டி. 28 சதவீதம் ,ஆன்லைன் கட்டணம் ரூ.30 சேர்த்து ஒரு டிக்கெட் விலை 183 ரூபாய் 60 காசு ஆகிறது. எனவே ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை ரூ.80 ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால்
    டிக்கெட்டுக்கு ரூ. 20 குறையும். ஆனால் இது வரை ஆன்லைன் கட்டணம் குறைக்கப்படவில்லை.



    இது தவிரபெரிய தியேட்டர்களில் ‘காம்போ’ என்ற பெயரில் பாப்கான், குளிர்பான பாட்டில் ஆகியவற்றுக்கு ரூ. 350 வசூலிக்கப்படுகிறது. இது தவிர குடிநீர் பாட்டில் மற்றும் தின்பண்டங்களுக்கு குறைந்தது ரூ.200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சாதாரண இரு சக்கர வாகனத்தில் படம் பார்க்க செல்லும் ஒருவரிடம் 1 மணி நேரத்துக்கு வாகன நிறுத்த கட்டணமாக ரூ. 20 வசூலிக்கபடுகிறது. கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ 50 வசூலிக்கப்படுகிறது. இதன்படிபார்த்தால் ஒருவர் ஒரு சினிமா பார்த்து விட்டு வர 3 மணி முதல் 4 மணி நேரம் ஆகும். இதில் வாகன கட்டணமாக மட்டும் ரூ. 80 முதல் ரூ. 200 வரை கொடுக்க வேண்டியது இருக்கிறது.

    தனியாக ஒருவர் படம் பார்க்க வந்தால் கூட குறைந்தது ரூ. 500 செலவு செய்ய வேண்டியது இருக்கிறது. குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீரை கூட தியேட்டருக்குள் கொண்டு செல்லவிடுவது இல்லை. ஒரு குடும்பத்தில் 4 பேர் சினிமா பார்க்கச் சென்றால் குறைந்தது ரூ. 2ஆயிரம் வரை செலவு ஆகியது. இதனால் தான் பெரும்பாலானோர் சினிமா பார்க்க தியேட்டர் செல்ல முடியாத நிலை உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    அரசு 30 சதவீத வரிவிதித்தால் டிக்கெட் விலை உயரும் என்று எதிர்ப்பு தெரிவித்த, தியேட்டர் உரிமையாளர்கள், பாப் கான், குளிர்பானம், .குடிநீர் பாட்டில் விலை, வாகன நிறுத்த கட்டணம் ஆன்லைன் டிக்கெட் பதிவு கட்டணம் ஆகியவற்றை குறைக்காதது ஏன்? என்று பட தயாரிப்பாளர் தரப்பில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    அரசின் 30 சதவீத வரி விதிப்பு அதிகம் தான். என்றாலும். தியேட்டரில் தின்பண்டம் மற்ற விலைகளை குறைத்தால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும் தமிழ்நாட்டில் 1,100 சினிமா தியேட்டர்கள் உள்ளன. இதில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கள் 30 கிராம பகுதி தியேட்டர்களை விட நகர தியேட்டர்களில் தான் தின்பண்டம் முதல் வாகன நிறுத்தம் வரை பலமடங்கு வசூலிக்கப்படுகிறது.

    இதை உடனே குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. எனவே பட தயாரிப்பாளர்கள் முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
    கற்பனை கலந்த உண்மை கதையாக உருவாகியிருக்கும் ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் முன்னோட்டம்
    அவ்னி மூவிஸ் சுந்தர்.சி வழங்கும் படம் ‘மீசைய முறுக்கு’.
    இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்து இசையமைத்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்குகிறார். இவருடன் விவேக், நாயகிகள் ஆத்மீகா, மனிஷா மற்றும் விக்னேஷ் காந்த், மா.கா.பா.ஆனந்த், மாளவிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - யு.கே.செந்தில் குமார், கீர்த்திவாசன், படத்தொகுப்பு - பென்னி ஆலிவர், ஸ்டண்ட்- தளபதி தினேஷ், நடனம்- சிவாராக் சங்கர்.



    ஆதி கதாநாயகனாக, இயக்குநராக அறிமுகமாகிறார். ‘மீசைய முறுக்கு’ ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பையோகிராபி திரைப்படம் போல் இருக்கும்.
    கொஞ்சம் கற்பனை கதை , நிறைய உண்மை கதை. இதுதான்`மீசைய முறுக்கு' திரைப்படம்.

    யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்கள். பாடல்கள், படம் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. வருகிற 21 -ந்தேதி வெளியாகும் இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டுரசிக்க வேண்டும் என்றார்.

    ஹிப்ஹாப் தமிழா ஆதி, “ தற்போது ஹீரோ மற்றும் இயக்குனராக மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளேன். இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சுந்தர்சிக்கு நன்றி. ஏற்கனவே பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும்” என்று கூறினார்.
    விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு விருந்து ஒன்று காத்திருக்கிறது
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன்  தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த வருடம் இவரது நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகி சாதனை படைத்தன.

    அதனைத்தொடர்ந்து, அவரது நடிப்பில் `விக்ரம் வேதா’ ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.இந்நிலையில், 'ரேணிகுண்டா' புகழ் பன்னீர்செல்வம்  இயக்கத்தில் 'கருப்பன்' படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த படத்தில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார். படத்தில் நாயகியாக தன்யா நடிக்கிறார்.



    மேலும் படத்தில் கிஷோர், பசுபதி, சிங்கம் புலி , ரேனுகா, காவேரி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தினை ஸ்ரீ சூரியா மூவீஸ் வெளியிடுகிறது . படதொகுப்பாளராக அந்தோணி பணியாற்றியுள்ளார்.


    இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் போஸ்டர் ஒன்று நேற்று வெளியானது. மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகின்றது. விஜய் சேதுபதி பெரிய முறுக்கு மீசையுடன் கிராமத்தில் வசிப்பவராக வருகிறார். ஏற்கனவே படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.  



    பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திலீப்பின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    நடிகை கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்துள்ள போலீசார் கூறியதாவது:-

    திலீப் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் ஓட்டல் தொழில் மூலம் எவ்வளவு வருமானம் பெறுகிறார் என்பதை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம்.

    2 வருடங்களுக்கு முன்பு மலையாள திரையுலகினரின் கருப்பு பண பதுக்கல் விவகாரம் குறித்து வருமான வரித்துறை ஆய்வுசெய்து விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைத்தது. இதில் திலீப்பிடம் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை தொடங்கி, பின்னர் கிடப்பில் போடப்பட்டது. இதனால் வருமான வரித்துறை மீண்டும் இதுபற்றி தீவிர விசாரணையை தொடங்க இருக்கிறது.

    துபாயை மையமாக கொண்டு இயங்கி வரும் கருப்பு பண பதுக்கல் கும்பலுடன் திலீப்புக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நடிகை கடத்தல் வழக்குடன் கருப்பு பண விவகாரமும் பூதாகரமாக வெடித்து இருப்பதால் திலீப்பின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    தலைமறைவான காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    காவ்யா மாதவன் 15 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். காசி, என்மன வானில், சாதுமிரண்டா ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். காவ்யா மாதவனுக்கும், நிஷால் சந்திரா என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் காவ்யா மாதவன் கணவருடன் குவைத்தில் குடியேறினார்.

    ஒரு வருடத்திலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் கேரளா திரும்பினார். இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டனர். பின்னர் திலீப்பை காவ்யா மாதவன் கடந்த வருடம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மீண்டும் சினிமாவில் நடித்து வந்தார். தற்போது பாவனா கடத்தல் வழக்கில் திலீப்புடன் காவ்யா மாதவனும் சிக்கி இருக்கிறார்.



    பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து எடுத்த வீடியோவை காவ்யா மாதவனின் கடை ஊழியரிடம் கொடுத்து விட்டதாக இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பல்சர் சுனில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். காவ்யா மாதவன் கடையில் இருந்து ரூ.2 லட்சம் வாங்கியதாகவும் கூறி இருக்கிறார். இந்த வாக்குமூலம் காவ்யா மாதவனை வழக்கில் சிக்க வைத்து இருக்கிறது.

    கடத்தலுக்கும், அவருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் காவ்யா மாதவன் தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவி உள்ளது. வீட்டை விட்டு வெளியேறி தோழி வீட்டில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது ‘பேஸ்புக்’ பக்கத்தையும் அவர் மூடி விட்டார். காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ,கேத்தரீன் தெரஸா நடித்திருக்கும் `கதாநாயகன்' படத்திற்கு புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது
    ‘மாவீரன் கிட்டு’ படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் தற்போது கதாநாயகன் படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்தரீன் தெரசா நடித்து வருகிறார்.படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.முருகானந்தம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

    முழு படமும் தயாரான நிலையில் படத்தை தணிக்கை குழுவிற்கு காண்பித்தனர். படம் பார்த்த பின் தணிக்கை குழுவினர் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கினார்கள். இதனால் ஒட்டுமொத்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.



    இதுதவிர விஷ்ணு விஷால் `பொன் ஒன்று கண்டேன்',`சிளுக்குவார்ப்பட்டி சிங்கம்',`இடம் பொருள் ஏவல்',`மின்மினி'ஆகிய படங்களில் நடிக்கிறார்.
    கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் மலையாள பட இயக்குனர் ஒருவர் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    கலாபவன் மணியின் மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு உள்ளதாகவும். அவர் மீது விசாரணை நடத்த அவரது தம்பி ராமகிருஷ்ணன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த நிலையில் பிரபல மலையாள சினிமாபட இயக்குனர் பைஜூ இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் நடிகர் கலாபவன் மணியின் சாவுக்கு திலீப்தான் காரணம். அதற்கு உரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.

    கொச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டாரகரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இயக்குனர் பைஜூவும் இன்று புகார் அளிக்க உள்ளார். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



    ஏற்கனவே பாவானா கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில், கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    `பாகுபலி' இரு பாகங்களிலும் ஒன்றாக நடித்த நடிகைகள் அனுஷ்கா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
    `பாகுபலி' படத்தில் அனுஷ்காவும் - ரம்யா கிருஷ்ணனும் கடுமையாக மோதிக் கொண்டது பழையகதை. மீண்டும் கடுமையாக மோதிக்கொண்டது புதுக்கதை. இப்போது இவர்கள் மோதலில் ஈடுபட்டது நாகார்ஜுனா யாருக்குச் சொந்தம் என்பதற்காக....

    முதல் மனைவி தான் இருக்க, புதிதாக வந்த அனுஷ்காவைப் பார்த்ததும் புலி போல் பாய்ந்தார் ரம்யாகிருஷ்ணன். “உன்னைப் போல் நான் எத்தனை பேரைப் பார்த்திருக்கிறேன். என்கிட்டையே பூச்சாண்டி காட்டுறியா?” என்று அனுஷ்காவும் கூறினார். இவர்களின் இந்த மோதல் உச்சம் பெற்றது ஓம்கார் பிலிம் சின் ‘சோக்காலி மைனர்’ படத்திற்காக.

    நாளை திரைக்கு வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஆகியோருடன் நாசர், லாவண்யா திரிபாதி, சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர்.
    நடிகை பாவனாவை கடத்துவதற்காக நடிகர் திலீப் ரூ.1½ கோடி பேரம் பேசிய தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    அவருக்கும், ஏற்கனவே இந்த வழக்கில் கைதான பல்சர் சுனிலுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து கொச்சி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    அதுபற்றி போலீசார் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-

    கேரள நடிகைகளின் அமைப்பான ‘அம்மா’ சார்பில் நடந்த மேடை நிகழ்ச்சி ஒத்திகையின்போது பாதிக்கப்பட்ட நடிகையிடம் திலீப் மோசமாக நடந்து கொண்டதாகவும், இதை நடிகை துணிச்சலுடன் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு பழிவாங்கும் எண்ணத்தில்தான் நடிகையை பாலியல் ரீதியில் துன்புறுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.



    அதன்பின்னர்தான் திலீப், பல்சர் சுனிலை சந்தித்து சதித் திட்டம் குறித்து விளக்கி உள்ளார். அப்போது அவர் இந்த திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றினால் ரூ.1½ கோடி பணம் தருவதாகவும், தனது படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் வாக்குறுதி அளித்து உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு திலீப், பல்சர் சுனில் இருவரும் பலமுறை பல இடங்களில் சந்தித்து சதித் திட்டம் குறித்து விவாதித்து இருக்கின்றனர். அப்போது நடிகையை நிர்வாணமாக படம் எடுத்தால் மட்டும் போதாது, அவருடைய நிர்வாண படம்தான் என்பதை உறுதிபடுத்தினால் மட்டுமே பேசியபடி பணத்தை தருவேன் என திலீப் திட்டவட்டமாக கூறி இருக்கிறார். இந்த சதித் திட்டத்தை அவர்கள் பிப்ரவரி மாதம் 17-ந்தேதி அரங்கேற்றினர்.

    அன்று பல்சர் சுனில் தனது கூட்டாளிகளுடன் நடிகையை காரில் கடத்தி இருக்கிறார். காருக்குள் அவரை நிர்வாணப்படுத்தியதுடன் பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோ மற்றும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளனர். மேலும் திலீப் கேட்டுக்கொண்டதுபோல் நடிகையின் நிர்வாண படம்தான் என்பதை உறுதிபடுத்தும் வகையில் நடிகையின் முகம், கழுத்து, மோதி விரல் ஆகியவற்றை மிக நெருக்கமாக படம் பிடித்தனர்.

    பல்சர் சுனில் இந்த சதித் திட்டத்தை நிறைவேற்றியபிறகு தன்னிடம் பேரம் பேசிய பணத்தை திலீப்பிடம் கேட்டபோதுதான் அவர்களுக்குள் சர்ச்சை வெடித்துள்ளது. தவிர, நடிகையின் நிர்வாண படங்களை திலீப்பிடம் ஒப்படைத்த பின்னரும் பல்சர் சுனிலுக்கு பேசிய பணம் வந்து சேரவில்லை என தெரிகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த அவர் ஜெயிலில் இருந்தவாறு பலமுறை திலீப்பின் மேலாளர் அப்புன்னியிடம் பேசி உள்ளார்.



    மேலும் திலீப்புக்கு பலமுறை கடிதமும் எழுதி இருக்கிறார். அதில் அவர் சந்திப்பு நடந்த திலீப் சொகுசு கார்களின் எண்களையும் பல்சர் சுனில் குறிப்பிட்டு இருந்தார்.

    நடிகர் திலீப் ரகசிய செல்போன் ஒன்றையும் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அவர் சினிமா தரப்பினர், குடும்பத்தினர் அல்லாத தனக்கு நெருக்கம் இல்லாதவர்களிடம் பேசியதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன.

    நடிகையை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற புகைப்படங்களும் கிடைத்து உள்ளன. இந்த சதித்திட்டத்தை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக புகைப்படக்கலை நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் திலீப் மீது இந்திய தண்டனை சட்டம் 376-டி (கூட்டு பலாத்காரம்) 120-டி (சதித்திட்டம்) 366 (கடத்தல்) 201 (குற்றங்களை மறைத்தல்) 212 (குற்றவாளிகளை பாதுகாத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பிரிவுகளின் கீழ் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.



    நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைதானது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்முட்டி, மோகன்லால் ஆகிய இருவருக்கும் போட்டியாக முன்னணி கதாநாயகன் அந்தஸ்தில் திலீப் இருந்தார். இவர் நடித்த படங்கள் கேரளாவில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தன. ஒரு படத்தில் நடிக்க திலீப் ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இவர் படங்களின் தொலைக்காட்சி உரிமை மட்டும் ரூ.5 கோடிக்கு வியாபாரம் ஆனது.

    சினிமா தவிர ரியல் எஸ்டேட் தொழிலிலும் கணிசமாக சம்பாதித்தார். கேரளாவில் பல இடங்களை வாங்கி குவித்து விலை ஏறியதும் விற்று லாபம் பார்த்து வந்தார். கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இவருக்கு சொந்தமாக ஓட்டல்களும் உள்ளன. இவற்றில் இருந்தும் அவருக்கு தினமும் லட்சக்கணக்கில் வருமானம் வந்தது. திலீப்பிடம் ரூ.400 கோடி சொத்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

    தற்போது 3 படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அவற்றின் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் கோடிக்கணக்கில் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் கவலையில் இருக்கிறார்கள். மேலும் 4 புதிய படங்களுக்கு கதை கேட்டு நடிக்க ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருந்தார். திலீப் சிறைக்கு சென்றதால் அந்த 4 படங்களில் இருந்தும் அவரை நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கங்களில் இருந்து திலீப் நீக்கப்பட்டு விட்டதால் அவருக்கு திரையுலகினர் இனிமேல் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

    நடிகர் திலீப் ஆன்மிகம் மற்றும் ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர். அவருக்கு தற்போது கண்டக சனி நடப்பதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

    “இது அவருக்கு மிகுந்த கஷ்டங்களையும், துன்பங்களையும் கொடுத்து ஆட்டிப்படைக்கும், இருப்பினும் அவர் சூறாவளியை போல் சூழன்று இதில் இருந்து மீண்டு வருவார்” என்று அவரது நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
    கணவரின் நடத்தைகள், சுபாவங்கள் மனைவிக்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது. உறவை மேம்படுத்த சில முக்கியமான குறிப்புகளை பார்க்கலாம்.
    கணவன்-மனைவி இடையேயான உறவு இனிமையாக தொடர கணவன் ஒருசில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவரின் நடத்தைகள், சுபாவங்கள் மனைவிக்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது. உறவை மேம்படுத்த சில முக்கியமான குறிப்புகள்:

    * கணவன்-மனைவி உறவுக்குள் மூன்றாம் நபர்களின் தலையீட்டுக்கு மட்டுமல்ல, ஒப்பீட்டுக்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது. இதர பெண்களை மனைவியுடன் ஒப்பீடு செய்து, ‘நீ ஏன் அவர்களை போல் நடந்து கொள்ள மறுக்கிறாய். அவர்கள் கடைப்பிடிக்கும் வழக்கங்கள் உன்னிடம் ஏன் இல்லை’ என்று கேள்விகளை எழுப்பக்கூடாது. அது மனைவிக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.

    * மற்றவர்கள் முன்னிலையில் அடுத்தவர்கள் மனைவியை புகழ்ந்தோ, குறை கூறியோ பேசுவதும் கூடாது.



    * மனைவியிடம் ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கக் கூடாது. மனைவி எதிர்பார்க்கும் பொருளோ, விஷயமோ எதுவாக இருந்தாலும் தம்மால் அவரின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொடுக்க முடியுமா? என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிட வேண்டும். நிச்சயம் நிறைவேற்றி தருவேன் என்று சத்தியம் செய்துவிட்டு பின்னர் பின்வாங்கக் கூடாது. போலியான வாக்குறுதிகள் கணவன் மீது மனைவி வைத்திருக்கும் நம்பிக்கையை இழப்பதற்கு வழிவகுத்துவிடும். உறவில் விரிசலை ஏற்படுத்திவிடவும் அது முக்கிய காரணமாகிவிடும்.

    * மனைவியின் உள்ளுணர்வுகளை புரிந்து கொண்டு அவர் கேட்காமலேயே ஆசைப்படுவதை நிறைவேற்றி கொடுப்பவராக கண்வர் விளங்க வேண்டும். முக்கிய தினங்களை நினைவில் வைத்துக்கொண்டு எதிர்பார்க்காமலேயே கணவர் பரிசு பொருட்களால் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது மனைவியின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஒருவேளை கணவருக்கு நினைவில்லை என்றாலும் சில தினங்களுக்கு முன்பாகவே முன்னோட்டமாக அதுபற்றி மனைவி பேசும்போது, புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    * கணவர் தான் எப்போதும் பிசியாக இருப்பது போல் காண்பித்து கொள்ளக் கூடாது. அது மனைவியிடம் விரக்தியை ஏற்படுத்திவிடும். பெண்கள் தங்களுடைய விருப்பங்களை மனம் விட்டு பேச நினைப்பார்கள். அப்போது கணவர் வேறு சிந்தனையிலேயே மூழ்கி இருந்தால், முகம் கொடுத்து பேசாமல் இருந்தால் அது பிரச்சினைகள் தோன்ற காரணமாகிவிடும்.



    * மனைவி நல்ல விஷயங்களை செய்யும்போதோ, வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சிக்கும்போதோ கணவர் ஊக்கப்படுத்த வேண்டும். மனைவியின் செயல்களை உற்சாகப்படுத்தவோ, பாராட்டவோ செய்யாமல் அமைதி காக்கக் கூடாது.

    * மனைவியின் நடவடிக்கைகள் மீது சந்தேகப்படுவதோ, சந்தேகப்பார்வை வீசுவதோ கூடாது. தவறு இருந்தால் பக்குவமாக புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர தடாலடியாக செயல்பட்டு மனவருத்தமடைய செய்துவிடக்கூடாது.

    * மனைவியிடம் சிக்கனத்தை காட்டக்கூடாது. மனைவியின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் கூட சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியதில்லை. அதுபோல் மனைவி செய்யும் சின்ன சின்ன செலவுகளுக்கெல்லாம் கணக்கு கேட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. அது கசப்பை ஏற்படுத்திவிடும்.
    மத்திய, மாநில அரசின் செயல்பாடுகளுக்கு மார்க் போடமாட்டேன், ஓட்டு மட்டுமே போடுவேன் என நடிகர் கமலஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நாள்தோறும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் நேற்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அவர் பேசியதாவது:-

    என்னை சிறையில் அடைத்துப் பார்க்க சிலருக்கு விருப்பம். முடிந்தால் என்னை கைது செய்தும் பார்க்கட்டும். என்னை கைது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்திய நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

    எனக்கு அனைத்து ரசிகர்களும் தேவை. கிரிக்கெட் எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் தேவை. நான் எதைச் செய்தாலும் விருப்பமுடன் தான் செய்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி ஏற்றுக்கொண்டேன். எதிர்மறை விமர்சனங்களை நேர்மையாக ஏற்றுக்கொள்கிறேன்.

    தசாவதாரம் வெளியான போது என்னை கொண்டாடினார்கள், தற்போது எதிர்க்கிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் நான் எதிர்த்துப் பேசுவேன். அரசியல் குறித்து பேச எனக்கு விருப்பமில்லை. 37 ஆண்டுகளாக நற்பணி மன்றம் மூலமாக பல நன்மைகளைச் செய்துள்ளேன். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று முதலில் கூறியது நான்தான்.

    ஐன கன மன பெங்காலி பாட்டு அதை முதலில் நாம் சரியாகப் பாடுவதில்லை. அதுபோலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. ஏனென்றால் அது அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது. எனவே அதைக் கற்றுக்கொடுத்தேன் அதில் தவறில்லை.

    மக்களுக்காக நான் என்றும் பேசுவேன். சினிமாவை நசுக்கும் எந்த வரியையும் விதிக்காதீர்கள். சாதி என்று பேசுகிறார்களே அதை முதலில் உங்களால் நீக்க முடியவில்லை. தமிழகத்தில் மட்டுமே சைவம் மதத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அரசின் செயல்பாடு குறித்து மதிப்பெண் போடுவது என் வேலை இல்லை. ஓட்டு மட்டுமே போடுவேன், தமிழக அரசியலில் எனது பங்கும் இருக்கிறது.

    அரசியலுக்கு நான் வரவேண்டிய அவசியமில்லை, நல்ல தலைவர் யாராவது வந்தால் போதும் என்றார்.   

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    ×