search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Kamalhassan"

  • அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு இங்கு கிடையாது.
  • தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு.

  சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  அப்போது, மேலவீதி பகுதியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

  சாதியம் தான் என் எதிரி. என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களிலும் அப்படிதான். பிறகு, சினிமாவிற்கு ஏன் ஜாதி பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கலாம். குடியின் கொடுமையைப் பற்றி நான் ஒரு குறும்படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரம் யாராக இருப்பான் ? ஒரு குடிகாரனாகத் தான் இருப்பான். அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது.

  அதுபோல், சாதி வெறியனை மையப்படுத்தி தான், படத்தின் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அவன் பாழான கதையையும், பண்பட்ட கதையையும் கூறுவதால் அது சாதியை உயர்த்திப்பிடிப்பது ஆகாது. விமர்சிப்பதாகும். இது பதில் அல்ல. விளக்கம்.

  ஆனால், சாதியே இல்லை என்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்களே என்று கேட்கலாம். இன்னும் எத்தனை பேர் அடிகோட்டு விளிம்பில் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.

  ஏனென்றால், இங்கு அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு கிடையாது. மாநிறத்தில் இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். கருப்பாக இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். அவனை எல்லாம் விடுவிக்க வேண்டும்.

  தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவில் நம் மீனவர்கள் கைதாவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

  ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது. இவர்கள் ஒன்றிய அரசு கிடையாது. மக்களோடு ஒன்றாத அரசு.

  இதனால் தான் திருமாவளவனோடு தோள் உரசி களம் காண்கிறேன்.

  தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார்.. இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.. குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
  • குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  குறிப்பாக, பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு, வேட்பாளர் பட்டியல் என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

  இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

  இந்த குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  • நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்பு.
  • விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

  இந்த நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டர்.

  இந்நிகழ்வில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றார்.

  மேலும், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

  நான் கவிஞனும் அல்ல.. கவிதை விமர்சகனும் அல்ல.. கவிஞராகவும், கலை விமர்சகராகவும் இருந்து கோலோச்சிய கலைஞர் மட்டும் இன்று இருந்திருந்தால் 'மகா கவிதை' தீட்டிய 'கவிப்பேரரசு' வைரமுத்துவை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

  • வரும் 24ம் தேதி அன்று ராகுல் காந்தி பாதயாத்திரையை டெல்லியில் தொடங்க உள்ளார்.
  • பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நேற்று 100-வது நாளை எட்டியது.

  வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

  இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானுக்குள் இந்த யாத்திரை நுழைந்திருக்கிறது.

  நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நேற்று 100-வது நாளை எட்டியது. இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.

  இந்நிலையில், வரும் 24ம் தேதி அன்று ராகுல் காந்தி பாதயாத்திரையை டெல்லியில் தொடங்க உள்ளார். இந்த பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
  • தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது.

  மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன், சீமான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

  இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  மேலும் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  வெளிநாடு வேலை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது.

  தற்போது மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2.
  • கொரோனா தொற்றும் மற்றும் பணப்பிரச்சினைகளால் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

  இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

  இந்தியன் 2

  இந்தியன் 2

  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் பணப்பிரச்சனைகளால் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சமீபத்தில் விக்ரம் திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் இந்தியன் இரண்டாம் பாகம் குறித்து கூறுகையில், "இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பொருளாதார சிக்கல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு மீண்டும் கண்டிப்பாக நடைபெறும். ரசிகர்களை காட்டிலும் நானும் இயக்குனர் சங்கரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். ராம் சரணின் ஆர்சி 15 படத்தின் வேலைகளை இயக்குனர் சங்கர் முடித்ததும் இந்தியன்-2 படத்தின் பணிகள் தொடங்கும்." எனக் கூறியுள்ளார். மேலும், இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

  நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன், “மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்“ என்று ஆவேசமாக பேசினார். #KamalaHassan #MakkalNeethiMaiyam
  திருச்செந்தூர்:

  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இதையடுத்து அவர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக காலை 10 மணி அளவில் நெல்லை மாவட்டம் பணகுடி பஸ் நிலையம் அருகே அவர் திறந்த காரில் வந்தார். அவருக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி நெல்லை மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வள்ளியூர் வழியாக திசையன்விளைக்கு கமல்ஹாசன் காரில் சென்றார்.  அப்போது அவர்பல இடங்களில் பேசினார்.

  பின்னர் திருச்செந்தூர் தேரடி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

  எனது நற்பணி இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியாக மாற்றி செயல்பட்டு வருகிறோம். சென்னையில் வருகிற 25-ந் தேதியில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடக்கிறது. இதில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நற்பணி இயக்க அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். நமது பாதை எப்போதோ முடிவாகி விட்டது. நமது கட்டமைப்பு குறித்து நேர்காணலில் தெரிவிக்கப்படும்.

  நான் சாதி, மதங்களை எதிர்ப்பதாக சிலர் கூறுகின்றனர். நான் மனிதர்களுக்கு இடையூறாக இருக்கும் எல்லா விஷயங்களையும் எதிர்த்து நிற்கிறேன். நான் சாதி, மதங் களுக்கு அப்பாற்பட்ட வன். நான் நேசிப்பது மனிதர்களை மட்டும்தான். அவர்களின் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன். இனி எனக்கு வழங்கப்பட்ட வேலை, எனது எஞ்சிய வாழ்நாட்களில் மக்களுக்கு பணி செய்வது மட்டும்தான். அதனை ஏற்கனவே தொலைக்காட்சியில் தெரிவித்து விட்டேன். அதனை பொதுமக்களிடம் நேரில் கூறுவதற்காக வந்துள்ளேன்.

  சில கட்சியினர் தேர்தல் வரும்போது மட்டுமே பல்வேறு ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். ஆனால் நான் மகாத்மா காந்தி ‘பாரத தர்ஷன்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டதுபோன்று, சுற்றுப்பயணம் செய்கிறேன். நான் காந்தியை பார்த்தது கிடையாது. ஆனால் அவரது கொள்கைகளை பின்பற்றி வருகிறேன். மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், மக்களின் நன்மைக்கு தடையாக எது வந்தாலும், அதனை தகர்த்து எறிவோம்.

  நமது நாடு பல்வேறு பாரம்பரிய பண்பாடுகளைக் கொண்டது. நமது நிலையை மேம்படுத்தி கொள்ள நாம் குரல் கொடுக்க வேண்டும். தற்போது செல்போன்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘மய்யம் ஆப்‘பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது நமது கட்சியின் உறுப்பினர் அட்டை போன்றது. இது அகிம்சை ஆயுதம் ஆகும். அதனை நீங்கள் பயன்படுத்தி அரசு பொறுப்பில் உள்ளவர்களிடம் உங்களின் உரிமைகளை உரிமையுடன் கேட்கலாம்.

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர்வு அதிகரித்து கொண்டே செல்கிறது. நமது கட்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ- மாணவிகள் அதிகளவில் சேருகின்றனர். அடுத்த மாதம் மாணவர்களின் எழுச்சி தெரியவரும். நான் கல்லூரிக்கு செல்வதை அரசு ஆணை பிறப்பித்து தடுத்து இருக்கிறார்கள். அது எனக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

  நான் பள்ளிப்பாடத்தைக்கூட சரியாக முடிக்கவில்லை. அதனால் எனக்கு கல்லூரியில் அனுமதி கிடைக்காது. இருந்தாலும் மாணவர்கள் பெருந்தன்மையாக அழைக்கிறார்கள். அதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த தடைகளை எல்லாம் வென்று சரித்திரம் படைப்போம். அதற்கான முன்மொழிவுகளை சினிமா பாடல்களில் கூறி இருக்கிறோம். அதனை நடைமுறையில் காண்பிப்போம். எங்கள் இளைஞர்களின் பலம் என்ன என்பதை தெரியப்படுத்துவோம். நாளை நமதே என்று நம்புங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்து கொள்வோம்.

  இவ்வாறு கமல்ஹாசன் ஆவேசமாக பேசினார்.  #KamalaHassan #MakkalNeethiMaiyam
  ×