என் மலர்

  நீங்கள் தேடியது "freezing"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கி உள்ளன. #BankStrike
  சென்னை:

  அனைத்து வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக நாடு முழுவதும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

  அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் ஒரே விகிதத்தில் சம்பளம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வங்கி மேலாளர்கள், சீனியர் மேலாளர்கள், உதவி மேலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

  அதிகாரிகள் ஸ்டிரைக்கால் அனைத்து வங்கி அதிகாரிகளும் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் மட்டும் வேலைக்கு வந்திருந்தனர். கிளர்க், கேஷியர், உதவியாளர்கள், கணக்கு மற்றும் கடன் வழங்கக்கூடிய பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். வங்கிகள் திறந்து இருந்தபோதிலும் சேவைகள் எதுவும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. வங்கி அதிகாரிகள் கையில் தான் பணம் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி, ரகசிய சாவி போன்றவை இருக்கும். அவர்கள் வந்தால்தான் பணப்பரிமாற்றம் மற்றும் காசோலை பரிவர்த்தனை செய்ய முடியும்.

  அதிகாரிகள் இல்லாமல் ஊழியர்கள் மட்டும் வங்கிகளில் இருந்ததால் வங்கி சேவை எதுவும் நடைபெறவில்லை. பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின.

  வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

  சென்னையில் உள்ள அனைத்து அரசு வங்கிகளும் அதிகாரிகள் ஸ்டிரைக்கால் செயல்படவில்லை. நாளை சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களும் விடுமுறை என்பதால் தொழில்செய்வோர், வியாபாரிகள், நிறுவனங்களின் பணப்பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டன.

  ஏ.டி.எம்.கள் செயல்பட்டாலும் அதிலிருந்து குறைந்த அளவுதான் பணம் எடுக்க முடிந்தது. பெரிய அளவிலான தொகை எடுக்க முடியாமல் வர்த்தக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டனர்.

  அதே நேரத்தில் அனைத்து தனியார் வங்கிகளும் இன்று செயல்பட்டன. தனியார் வங்கிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. காசோலை பரிமாற்றம், டி.டி. எடுத்தல் போன்ற பணிகள் எவ்வித கணக்கமும் இல்லாமல் நடைபெற்றது.


  புரசைவாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடப்பட்டு இருக்கும் காட்சி

  தேசிய வங்கிகளான ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.ஓ.பி., பெடரல் வங்கி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, கார்ப்பரேசன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் சேவை முடங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

  தொடர்ந்து 3 நாட்கள் வங்கி சேவை கிடைக்காது என்பதால் மக்கள் வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் படையெடுக்க தொடங்கி விட்டனர்.

  24-ந்தேதி திங்கட்கிழமை மட்டும் வங்கிகள் செயல்படும். அதனை தொடர்ந்து மறுநாள் 25-ந்தேதி கிறிஸ்துமஸ், 26-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தொடர் விடுமுறை, வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்களின் பணப்பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை முடங்கும். #BankStrike

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே பெரும்பாறையில் பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்சேவை டவர் பழுதடைந்துள்ளது. இதனால் 2 நாட்களாக பி.எஸ்.என்.எல். செல்சேவை இயங்கவில்லை.
  பெரும்பாறை:

  திண்டுக்கல் அருகே பெரும்பாறையில் பி.எஸ்.என்.எல். செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பி.எஸ்.என்.எல். செல்சேவை டவர் பழுதடைந்துள்ளது. இதனால் 2 நாட்களாக பி.எஸ்.என்.எல். செல்சேவை இயங்கவில்லை.

  எனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

  எனவே இது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பி.எஸ்.என்.எல். செல்சேவையை சரிசெய்து இயக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானலில் மீண்டும் கனமழை பெய்ததால் சீரமைப்பு பணிகள் சுணக்கம் அடைந்துள்ளன. #gajacyclone #heavyrain

  கொடைக்கானல்:

  கஜா புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானல் நகர், மேல்மலை, கீழ்மலை ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

  போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு கொடைக்கானல்- வத்தலக்குண்டு, பழனிசாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மேல்மலை கிராமங்களுக்கும் போக்குவரத்து தொடங்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இதனால் காய் கறிகளை கிடைத்த விலைக்கு மதுரை மற்றும் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

  கடந்த 4 வருடங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த ஆண்டு ஏற்பட்ட புயலால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

  பல ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. மேலும் அழுகல் நோய் தாக்கத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கொடைக்கானல் நகர்பகுதியில் 75 சதவீதம் மின்வினியோகம் தரப்பட்டுள்ளது. மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் 2 நாட்களில் மின்வினியோகம் சீரமைக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

  நேற்றிரவு சாரலாக தொடங்கிய மழை விடிய விடிய கனமழையாக நீடித்தது. இதனால் சீரமைப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மலை கிராமமக்கள் கடந்த 7 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உறவினர்களது வீடுகளுக்கு சென்று செல்போன் சார்ஜ் மற்றும் அடிப்படை தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

  இருந்தபோதும் மலை கிராமங்களில் இயல்புநிலை திரும்ப சில நாட்களாகும் என வேதனையுடன் தெரிவித்தனர். #gajacyclone #heavyrain

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதால் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவித்தனர். #sterliteprotest
  நெல்லை:

  தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருவதை தவிர்ப்பதற்காக தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் இணையதள சேவையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது.

  அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் இணையதள சேவை முடக்கப்பட்டது. இதனால் வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொதுமக்களால் தகவல்களை பரிமாற முடியவில்லை.  தற்போது என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இணையதளம் மூலமாகவே மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டதால், மாணவர்களால் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

  அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டல அலுவலகம், நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

  நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு சேவை மையங்கள், தனியார் இண்டர்நெட் மையங்களிலும் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பெயர் மாற்றம், ஆதார் அட்டை இணைப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ரெயில் டிக்கெட், பத்திரப்பதிவு ஆகியவைகளும் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

  மேலும், வங்கிகளின் பணப்பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கிகளுக்கு வந்தவர்கள் காசோலை, வரைவோலை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #sterliteprotest

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையதள சேவை முற்றிலும் முடங்கியதால் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். #sterliteprotest
  சென்னை:

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  போராட்டக்காரர்கள் ஊர்வலமாக புறப்பட்டது முதல் போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூடு, கல்வீச்சு, பலியானவர்களின் புகைப்படம் என பல்வேறு விபரங்கள் உடனுக்குடன் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவியது.

  போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசு மற்றும் போலீசாருக்கு எதிரான பதிவுகளையும் ஏராளமானோர் பதிவிட்டனர். இதனால் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவியது.

  போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும் தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் சம்பவங்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இதன் தாக்கத்தை போலீசார் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

  இதையடுத்து வன்முறை பரவாமல் இருப்பதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு (27-ந் தேதி வரை) இணையதள சேவையை நிறுத்தி தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டது.

  இதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணி முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது.

  ஆனால் தொலைபேசி சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை. வழக்கம் போல் மற்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேச முடிகிறது.

  இணையதள சேவை முடங்கியதால் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை சமூக வலை தளங்களில் பதிவிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் ரீதியாக இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். #sterliteprotest
  ×