என் மலர்

  செய்திகள்

  பெரும்பாறை பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முடக்கம்
  X

  பெரும்பாறை பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே பெரும்பாறையில் பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்சேவை டவர் பழுதடைந்துள்ளது. இதனால் 2 நாட்களாக பி.எஸ்.என்.எல். செல்சேவை இயங்கவில்லை.
  பெரும்பாறை:

  திண்டுக்கல் அருகே பெரும்பாறையில் பி.எஸ்.என்.எல். செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பி.எஸ்.என்.எல். செல்சேவை டவர் பழுதடைந்துள்ளது. இதனால் 2 நாட்களாக பி.எஸ்.என்.எல். செல்சேவை இயங்கவில்லை.

  எனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

  எனவே இது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பி.எஸ்.என்.எல். செல்சேவையை சரிசெய்து இயக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×