என் மலர்
நீங்கள் தேடியது "Perumparai area"
- 2 தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார், தலைமையில் வனவர்கள் ரமேஷ், முத்துகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, பெரும்பாறை, சித்தரேவு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வத்தலக்குண்டு வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது36), கொடைக்கானல் பள்ளங்கியை சேர்ந்தவர் ஜெயராமன் (74), வீரக்கல் கும்மம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (49) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் விற்பனைக்காக 2 யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே பெரும்பாறையில் பி.எஸ்.என்.எல். செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பி.எஸ்.என்.எல். செல்சேவை டவர் பழுதடைந்துள்ளது. இதனால் 2 நாட்களாக பி.எஸ்.என்.எல். செல்சேவை இயங்கவில்லை.
எனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பி.எஸ்.என்.எல். செல்சேவையை சரிசெய்து இயக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






