என் மலர்
நீங்கள் தேடியது "பெரும்பாறை"
- அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாறை:
அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில், நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது. இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கே.சிங்காரக்கோட்டை, சேவுகம்பட்டி, செங்கட்டான்பட்டி, மருதாநதி அணை, கோம்பை, சித்தரேவு,
எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி, போடிகாமன்வாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
- 2 தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார், தலைமையில் வனவர்கள் ரமேஷ், முத்துகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, பெரும்பாறை, சித்தரேவு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வத்தலக்குண்டு வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது36), கொடைக்கானல் பள்ளங்கியை சேர்ந்தவர் ஜெயராமன் (74), வீரக்கல் கும்மம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (49) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் விற்பனைக்காக 2 யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






