search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank services"

    வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கி உள்ளன. #BankStrike
    சென்னை:

    அனைத்து வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக நாடு முழுவதும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் ஒரே விகிதத்தில் சம்பளம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வங்கி மேலாளர்கள், சீனியர் மேலாளர்கள், உதவி மேலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் ஸ்டிரைக்கால் அனைத்து வங்கி அதிகாரிகளும் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் மட்டும் வேலைக்கு வந்திருந்தனர். கிளர்க், கேஷியர், உதவியாளர்கள், கணக்கு மற்றும் கடன் வழங்கக்கூடிய பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். வங்கிகள் திறந்து இருந்தபோதிலும் சேவைகள் எதுவும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. வங்கி அதிகாரிகள் கையில் தான் பணம் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி, ரகசிய சாவி போன்றவை இருக்கும். அவர்கள் வந்தால்தான் பணப்பரிமாற்றம் மற்றும் காசோலை பரிவர்த்தனை செய்ய முடியும்.

    அதிகாரிகள் இல்லாமல் ஊழியர்கள் மட்டும் வங்கிகளில் இருந்ததால் வங்கி சேவை எதுவும் நடைபெறவில்லை. பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின.

    வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சென்னையில் உள்ள அனைத்து அரசு வங்கிகளும் அதிகாரிகள் ஸ்டிரைக்கால் செயல்படவில்லை. நாளை சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களும் விடுமுறை என்பதால் தொழில்செய்வோர், வியாபாரிகள், நிறுவனங்களின் பணப்பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    ஏ.டி.எம்.கள் செயல்பட்டாலும் அதிலிருந்து குறைந்த அளவுதான் பணம் எடுக்க முடிந்தது. பெரிய அளவிலான தொகை எடுக்க முடியாமல் வர்த்தக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டனர்.

    அதே நேரத்தில் அனைத்து தனியார் வங்கிகளும் இன்று செயல்பட்டன. தனியார் வங்கிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. காசோலை பரிமாற்றம், டி.டி. எடுத்தல் போன்ற பணிகள் எவ்வித கணக்கமும் இல்லாமல் நடைபெற்றது.


    புரசைவாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடப்பட்டு இருக்கும் காட்சி

    தேசிய வங்கிகளான ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.ஓ.பி., பெடரல் வங்கி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, கார்ப்பரேசன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் சேவை முடங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து 3 நாட்கள் வங்கி சேவை கிடைக்காது என்பதால் மக்கள் வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் படையெடுக்க தொடங்கி விட்டனர்.

    24-ந்தேதி திங்கட்கிழமை மட்டும் வங்கிகள் செயல்படும். அதனை தொடர்ந்து மறுநாள் 25-ந்தேதி கிறிஸ்துமஸ், 26-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தொடர் விடுமுறை, வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்களின் பணப்பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை முடங்கும். #BankStrike

    ×