search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deal"

    • அவசர காலங்களில் எப்படி செயல்படுவது என்பது தொடர்பாக விளக்க கையேடுகளும் வழங்கப்பட்டன.
    • 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சூலூர்,

    மேற்கு தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

    இந்த நிலையில் சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மாதம் 8-ந்தேதி வருவாய், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊராட்சி வளர்ச்சி துறை, மின் துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் நடத்தப்பட்டன.

    இதனை தொடர்ந்து நொய்யல் ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக சூலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் தீயணைப்புத்துறை ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த ஒத்திகை சோதனை நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது ஆற்றங்கரைேயோரம் வசிப்போர் எப்படி தற்காத்து கொள்வது மற்றும் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் ஆகியவை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க பயிற்சிகள் தரப்பட்டன. அவசர காலங்களில் எப்படி செயல்படுவது என்பது தொடர்பாக விளக்க கையேடுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சூலூர் தாசில்தார் நித்திலவள்ளி, தீயணைப்பு துறை அலுவலர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. அரசை கவிழ்க்க தினகரனின் ரகசிய பேரம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்று கிளி ஜோதிடர் போல பேசி வருகிறார். ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தி.மு.க. நிலைகுலைந்து போகும்.

    ஸ்டாலினும், தினகரனும் மறைமுக உடன்பாடு வைத்துக் கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த நினைக்கிறார்கள்.

    கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் மு.க.ஸ்டாலினும், தினகரனும் ரகசியமாக சந்தித்து பேசினர். அதனை அப்போது 2 பேரும் மறுத்தனர். ஆனால் அந்த ரகசிய சந்திப்பு இப்போது அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    தி.மு.க.வுடன் இணைந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்போம் என்று தினகரன் கட்சியை சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

    இதன் மூலம் மு.க.ஸ்டாலின், தினகரன் ரகசிய சந்திப்பு தற்போது வெளி வந்துள்ளது. பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அ.தி.மு.க.வை தினகரன், முக.ஸ்டாலின் போன்ற துரோகிகளும், எதிரிகளும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கையில் துறைமுகங்களை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இலங்கை மற்றும் சீனா இடையே துறைமுகத் திட்ட ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தானது. #SriLankaPort

    கொழும்பு:

    இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது சீனாவுடன் நட்புறவு கொண்டிருந்தார்.

    துறைமுகங்களை சீன நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தார். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

    எனவே இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அங்கு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்து மைத்ரியபால சிறிசேனா வெற்றி பெற்றார். அதையடுத்து அங்கு சீனாவின் ஆதிக்கம் தடுக்கப்பட்டது. அதிபர் சிறிசேனாவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் இந்தியாவுடன் நட்புறவாக இருந்தனர்.

    தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து இலங்கையில் மீண்டும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்க தொடங்கி விட்டது.

    தற்போது துறைமுகங்களை மேம்படுத்தும் திட்ட பணிகள் மீண்டும் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான 2 ஒப்பந்தங்கள் கடந்த வாரம் கையெழுத்தானது.

    இலங்கை அரசுக்கு சொந்தமான ஜெயா கண்டெய்னர் டெர்மினல் நிறுவனம் சீன துறைமுக என்ஜினீயரிங் நிறுவனத்துடன் இணைந்து ரூ.236 கோடி (32 மில்லியன் டாலர்) காண்டிராக்ட் கையெழுத்தாகியுள்ளது.

    சீனாவின் ஷாங்காய் ஷேன்குவா கனரக தொழிற்சாலை நிறுவனத்திடம் இருந்து ரூ.190 கோடிக்கு (25.7 மில்லியன் டாலர்) மதிப்பில் 3 கிரேன் எந்தி ரங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை துறைமுக கழகம் வெளியிட்டுள்ளது. #SriLankaPort

    இந்திய கடற்படைக்கு ரூ.3,500 கோடி மதிப்பில் 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்கு இந்தியா - ரஷியா நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. #India #Russia #Warship
    புதுடெல்லி:

    இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் - ரஷியாவின் ரோசோபோன் எக்ஸ்போர்ட் ஆகியவற்றின் இடையே ரூ.3,500 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்காக 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்கு இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

    இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க்கப்பல்களும் கட்டப்படும். இதற்காக வடிவமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் சில உபகரணங்களை ரஷிய நிறுவனம் அளிக்கும்.

    இதுபற்றி கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சேகர் மிட்டல் கூறும்போது, “இந்திய கடற்படைக்காக இந்த 2 போர்க் கப்பல்களும் கட்டப்படுகின்றன. கப்பல் கட்டும் பணி 2020-ம் ஆண்டு தொடங்கும். முதல் கப்பல் 2026-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். மற்றொரு போர்க்கப்பல் 2027-ம் ஆண்டு இணைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
    சிரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ராணுவம் தொடர்பான புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. #Iran #Syria #NewDealSigned
    டமாஸ்கஸ்:

    சிரியாவின் உள்நாட்டு போரில் அதிபருக்கு ஆதரவாக ஈரான் நாட்டு இராணுவ படைகள் போரிட்டு வருகின்றன. சிரியா உள்நாட்டு போரில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளும், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களும் போரிட்டு மக்களை இரையாக்கி வருவதாக கருத்து நிலவுகிறது.

    இதையடுத்து சமீபத்தில், சிரியாவில் இருக்கும் ஈரான் படைகளை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தி இருந்தது. இதற்கு பதிலளித்திருந்த ஈரான், சிரியா அதிபரின் வேண்டுகோளை ஏற்று ஈரான் உதவி வருவதாகவும், படைகளை திரும்ப பெரும் எந்த நோக்கமும் தற்போது இல்லை எனவும் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், நேற்று ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமிர் ஹடாமி அரசு முறை பயணமாக சிரியா சென்றார். அங்கு சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இரு நாடுகளுக்கு இடையே இராண்வ ஒத்துழைப்பு தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. #Iran #Syria #NewDealSigned
    20 கோடி டாலர் கடன் உதவியுடன் இந்தியா - ருவாண்டா இடையே இன்று 8 ஒப்பந்தங்கள் கையொப்பமானதுடன் ருவாண்டா மக்களுக்கு 200 பசுக்களை நினைவுப்பரிசாக அளித்தார் மோடி. #IndiaRwanda #signpacts
    கிகாலி:

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக ருவாண்டா நாட்டுக்கு சென்ற இந்திய தலைவர் என்ற வகையில் அந்நாட்டின் தலைநகர் கிகாலி-ல் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இன்று ருவாண்டா அதிபர் பால் ககாமே - நரேந்திர மோடி தலைமையில் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ருவாண்டாவில் 3 விவசாய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவும், தலைநகர் கிகாலியில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தொழிற்பூங்காக்களை உருவாக்கவும் 20 கோடி அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க மோடி ஒப்புதல் அளித்தார்.


    மேலும், இருநாடுகளுக்கு இடையிலான 8 புதிய ஒப்பந்தங்களும் இன்று கையொப்பமாகின. பின்னர், அங்கு வாழும் இந்தியர்களிடையே பேசிய பிரதமர் மோடி, ருவாண்டில் இந்திய தலைமை தூதரகம் விரைவில் திறக்கப்படும் என குறிப்பிட்டார்.

    இந்தியாவின் அன்பளிப்பாக கிராமப்புறங்களில் வாழும் விவசாய மக்களுக்கு 200 பசு மாடுகளையும் மோடி வழங்கினார்.



    இன்று மாலை உகாண்டா நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி, நாளை தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பர்க் நகரில் தொடங்கும் ’பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். #IndiaRwanda #signpacts
    ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு இந்த வாரம் நடவடிக்கை எடுக்கும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Petrol #Diesel
    புதுடெல்லி:

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் வேளையில், அதில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.87 ஆகவும் இருந்தது.

    நாட்டிலே மிகக்குறைவான விலை என்றால் அது டெல்லி விலைதான். அங்கு நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.87, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.68.08 ஆகும்.

    மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபடும். இதற்கு மாநில அரசுகள் விதிக்கிற உள்ளூர் வரி அல்லது மதிப்பு கூட்டு வரிதான் காரணம் ஆகும். மத்திய அரசைப் பொறுத்தவரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது.

    தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

    இது பற்றி மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது அரசுக்கு நெருக்கடியான சூழல் ஆகும். இதற்கு கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி பெட்ரோலியம் அமைச்சகத்துடன் நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

    உற்பத்தி வரி குறைப்புக்கான சாத்தியக்கூறுகளை நான் மறுப்பதற்கு இல்லை. இருந்தபோதும் அதை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. உற்பத்தி குறையை குறைத்தால் ஏற்படுகிற நிதி பாதிப்புகளை மனதில் கொள்ள வேண்டியது இருக்கிறது. பெட்ரோல், டீசல் சில்லரை விலையில் 20 முதல் 35 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் வரியாக உள்ளது. எனவே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை எழுந்து உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு இந்த வாரம் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

    டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு ( ஒரு டாலரின் மதிப்பு ரூ.67.97 ஆகும்) வீழ்ச்சியை சந்தித்ததும் விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×