உலகம்

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயமில்லை - அமெரிக்கா அறிவிப்பு

Published On 2022-06-11 10:06 GMT   |   Update On 2022-06-11 10:06 GMT
  • கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தளர்த்தி வருகிறது.
  • அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பரிசோதனை உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிட்டது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தளர்த்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் கெவின் முனோஸ் டுவிட்டரில் கூறும்போது, சர்வதேச பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகிறது. அதேவேளையில் பயணிகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் அல்லது 90 நாட்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்ததற்கான சான்றிதழை பயணத்துக்கு முன்பு காண்பிக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News