உலகம்
null

மனைவியை கற்பழித்தாரா? டிரம்பின் வாழ்க்கை வரலாறு படத்தில் சர்ச்சை காட்சி

Published On 2024-05-22 10:12 GMT   |   Update On 2024-05-22 10:16 GMT
  • கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
  • டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வாழ்க்கையை மையமாக கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டது. இதை அலி அப்பாசி என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இதில் டிரம்ப் தனது முன்னாள் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காட்சி இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் அலி அப்பாசி கூறும்போது, எங்கள் மீது டிரம்ப் தரப்பினர் வழக்குத் தொடரும் முன் படத்தைப் பார்க்க காத்திருக்க வேண்டும். இது அவர் விரும்பாத படம் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஆச்சரியப்படுவார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

Tags:    

Similar News