உலகம்

ஈரான் மீது தாக்குதல் மிரட்டல்- அமெரிக்காவுக்கு ரஷியா எதிர்ப்பு

Published On 2026-01-14 18:16 IST   |   Update On 2026-01-14 18:16:00 IST
  • நாடு மீது மீண்டும் தாக்குதல் நடத்த போராட்டங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடாது.
  • உலகளாவிய சர்வதேச பாதுகாப்பிற்கும் பாதகமான விளைவுகள் ஏற்படும்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியதாவது:-

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா விடுக்கும் மிரட்டல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா விமானப்படை ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கிய பிறகு, அந்த நாடு மீது மீண்டும் தாக்குதல் நடத்த போராட்டங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடாது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் மத்திய கிழக்கிற்கும் உலகளாவிய சர்வதேச பாதுகாப்பிற்கும் பாதகமான விளைவுகள் ஏற்படும்.

வர்த்தக வரிகளை உயர்த்துவதன் மூலம் ஈரானின் வெளிநாட்டு கூட்டாளிகளை மிரட்டிப் பணிய வைக்கும் அமெரிக்காவின் முயற்சி கண்டித்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News