செய்திகள்
பைசர் தடுப்பூசி

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது வியட்நாம் அரசு

Published On 2021-06-13 23:18 GMT   |   Update On 2021-06-13 23:18 GMT
சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனகா ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு வியட்நாம் அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
வியட்நாம்:

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், உலக நாடுகள் முழுவதும் பரவியது.

தற்போது உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 கோடியை தாண்டியுள்ளது.

இந்த கொடிய வைரசை ஒழிப்பதற்கு தடுப்பூசி ஒன்று மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்த உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கின. தற்போது உலக ஆராய்ச்சியாளர்கள் போராடி, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளனர்.

இதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா, இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட பல தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், வியட்நாமில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
Tags:    

Similar News