என் மலர்

  நீங்கள் தேடியது "Corona Vaccine"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.
  • இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது.

  ஈரோடு:

  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் கடந்த 7-ந் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

  ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

  இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது.

  மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணி யாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது.

  இந்நிலையில் கடந்த 7-ந் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 1,547 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 24 ஆயிரத்து 538 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 16 ஆயிரத்து 278 பேரும் என மொத்தம் 42,363 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரே நாளில் 11,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
  • பெரம்பலூரில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது

  பெரம்பலூர்:

  தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 33-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 11,066 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரே நாளில் 21,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
  • அரியலூரில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது

  அரியலூர்:

  தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 33-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் 21,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது."

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருவள்ளூர் மாவட்டத்தில் 800 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
  • 3200 பணியாளர்கள் மூலம் 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

  திருவள்ளூர்:

  கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க கொரோனோ தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

  இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

  காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1859 இடங்களில் கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

  திருவள்ளூர் மாவட்டத்தில் 800 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 3200 பணியாளர்கள் மூலம் 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகராட்சியில் மட்டும் 12 தடுப்பு முகாமில் 57 பேர் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

  திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை நடந்த 32 கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 16லட்சத்து 99 ஆயிரத்து 904 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1,059 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தடுப்பூசி முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்எச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டு தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

  18 முதல் 59 வயதினருக்கு செப்டம்பர் 30-ந்தேதி வரை இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கூறி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூர் மாவட்டத்தில் 3742 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
  • பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பொதுமக்களை பாதிக்காமல் தடுக்கும் பொருட்டு சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை (7 ந்தேதி) 3742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இரண்டாவது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடைவெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் 15.07.2022 முதல் 30.09.2022 வரை 75 நாட்களுக்கு மட்டுமே 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் விலையில்லா கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. 

  கடலூர் மாவட்ட த்தில் தற்போது 12,48,000 பயனாளிகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளனர். அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி யினைசெலுத்திக் கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று தற்போது மாவட்ட த்தில் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொ ள்வதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானாலும் அது தீவிரமாகாது என்பதால், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து க்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 15 வயதுக்குட்பட்ட 39 மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் தடுப்பூசி போட்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து சுகாதாரத்துறை ஊழியரை கைது செய்தனர்.

  மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. அப்போது அந்த பள்ளியில் 15 வயதுக்குட்பட்ட 39 மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் தடுப்பூசி போட்டார். இதுதொடர்பாக புகார் எழுந்தது.

  இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சுகாதாரத்துறை ஊழியர் ஜிதேந்திர அகிர்வார் தடுப்பூசி போட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 32-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது.
  • 17 ஆயிரத்து 700 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

  திருப்பூர் :

  திருப்பூர் மாவட்டத்தில் 32-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது. மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.அரசு மருத்துவக்கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை உட்பட பல பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தவிர 17 ஆயிரத்து 700 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

  திருப்பூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 21 லட்சத்து 38 ஆயிரத்து 014 பேர் முதல் தவணையும், 16 லட்சத்து 77 ஆயிரத்து 192 பேர் இரண்டாம் தவணையும் என மொத்தம் 39 லட்சத்து 702 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

  அதிக பட்சமாக கோவிஷீல்டு தடுப்பூசியை 31 லட்சத்து 77 ஆயிரத்து 455 பேரும், கோவேக் ஷின் தடுப்பூசியை, 16 லட்சத்து 7 ஆயிரத்து 93 பேரும் செலுத்தியுள்ளனர்.

  நடப்பாண்டு 12 முதல், 14 வயது பிரிவினருக்கு செலுத்தப்பட்டு வரும் 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசி ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 677 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 60 வயதை கடந்தவர்களே குறைந்த பட்சமாக (4.84 லட்சம் பேர்) தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதிகபட்சமாக 18 வயதை கடந்த 22 லட்சத்து 23 ஆயிரத்து 417 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 45 முதல் 60 வயது பிரிவில் 8.64 லட்சம் பேரும், 15 முதல் 17 வயது பிரிவில் 1.61 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 12 முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 2 லட்சத்து 74 ஆயிரத்து 243 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

  ஜூன் முதல் வாரத்தில் மாவட்டத்தில் 37.77 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியிருந்தனர். ஜூன் மாதம் நடப்பு மாதம் நடந்த இருமுகாம்கள் கடந்த, 15ந் தேதி முதல் தொடர்ந்து செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையால் இரண்டு மாதத்துக்குள் 39 லட்சம் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரே நாளில் 30,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
  • 32-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது

  அரியலூர்:

  தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 32-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் 30,201 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
  • விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 32-வது சுற்று கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 2,448 மையங்களில் நடைபெற்றது.

  இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து க்கொள்ள முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், இரண்டு தவணை செலுத்தி யவர்கள் மூன்றாவதாக முன்னெ ச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டு பய ன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

  மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 416 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்பட்டு குழுவினர் மூலம் மாவட்ட முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 270 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 5,870 பேருக்கும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 25 ஆயிரத்து 95 பேருக்கும், ஆக மொத்தம் 31, 235 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் தங்களுடைய செல்போனில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ். மூலம் குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

  எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை செய்து தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் எவ்வாறு எஸ்.எம்.எஸ்.வந்தது. சுகாதாரத்துறை பணி யாளர்கள் அலட்சி யமாக செயல்படுகிறார்களா? அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்துவ தற்கான இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் சுகாதாரப் பணியாளர்கள் முறை கேட்டில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தகுதியான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
  • அதற்காக இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

  சென்னை:

  தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய-மாநில அரசு பங்களிப்புடன் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன.

  இதில் 18 முதல் 59 வயது வரை உள்ளோர், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி, தடுப்பூசி போட வேண்டிய நிலை இருந்தது.

  இதற்கிடையே 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் செப்டம்பர் 30-ந்தேதி வரை இலவசமாக 'பூஸ்டர் டோஸ்' போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

  இன்று ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தில் 32-வது மெகா தடுப்பூசி முகாமை, தமிழக அரசு நடத்துகிறது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில், நிலையான முகாம் மற்றும் நடமாடும் முகாம் என்ற அடிப்படையில் முகாம்கள் நடத்தப்பட்டன.

  காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில், முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை போடாத 1.5 கோடி பேர் மற்றும் பூஸ்டர் டோஸ் போடாத 3.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

  தகுதியான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

  செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தகுதியான அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்.

  இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த 75 நாட்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போடாவிட்டால் பிறகு கட்டணம் செலுத்தியே போட வேண்டும்.

  உலகில் 63 நாடுகளில் வேகமாக பரவும் குரங்கம்மை நோய் தொற்று தமிழகத்தில் இதுவரை ஏற்படவில்லை. அண்டை மாநிலமான கேரளாவில் பரவ தொடங்கி இருப்பதால் கேரளாவையும், தமிழகத்தையும் இணைக்கும் 13 வழித்தடங்களில் தீவிர கண்காணிப்பு நடக்கிறது. நடந்தும், வாகனங்களில் வருபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். குரங்கம்மை அறிகுறி ஏதாவது தெரிகிறதா? என்று கண்டறிந்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

  இதுவரை தமிழகத்தில் பாதிப்பு இல்லை. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சுகாதாரத்துறையை சேர்ந்த 344 பேர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவிக்கும் விதமாக தனிப்பட்ட முறையில் பாராட்டு கடிதங்களை எழுதி வாழ்த்தி உள்ளார்.
  • பிரதமரின் பாராட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

  புதுடெல்லி:

  இந்தியாவில் 200 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவிக்கும் விதமாக தனிப்பட்ட முறையில் பாராட்டு கடிதங்களை எழுதி வாழ்த்தி உள்ளார்.

  இதனை தடுப்பூதி செலுத்தியவர்கள் கோவின் இணைய தளத்துக்கு சென்று பிரதமரின் பாராட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print