செய்திகள்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா

இரண்டாவது அலை கொரோனா பாதிப்பு- நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் தள்ளிவைப்பு

Published On 2020-08-17 06:46 GMT   |   Update On 2020-08-17 06:46 GMT
நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் 2வது அலை பரவத் தொடங்கிய நிலையில், பொதுத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆக்லாந்து:

நியூசிலாந்தில் 102 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் நிம்மதியாக இருந்த நிலையில், அந்நாட்டின் மிகப்பெரிய நகரான ஆக்லாந்தில் 49 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நிலையில், ஆக்லாந்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

கொரோனா பெருந்தொற்று அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில்  வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுதேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நான்கு வாரங்களுக்கு அதாவது வரும்  அக்டோபர் 17 ஆம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று அச்சுறுத்தலால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை கைவிட்டது. இதையடுத்து, தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய கட்டயத்திற்கு நியூசிலாந்து பிரதமர் தள்ளப்பட்டுள்ளார். 120 உறுப்பினர்களை கொண்ட நியூசிலாந்து பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News