செய்திகள்
மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்கை சிறையில் அடைக்க சொல்லும் அமெரிக்க எம்.பி.

Published On 2019-09-06 02:43 GMT   |   Update On 2019-09-06 02:43 GMT
பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தும் விவகாரத்தில் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கை சிறையில் தள்ள வேண்டும் என அமெரிக்க எம்.பி. ரான் வைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் :

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘பேஸ்புக்’கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் ‘பேஸ்புக்’கில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது தொடர்பாக ‘பேஸ்புக்’ நிறுவனம் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தும் விவகாரத்தில் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கை சிறையில் தள்ள வேண்டும் என அமெரிக்க எம்.பி. ரான் வைடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “பேஸ்புக் பயனாளர்களின் பாதுகாப்பு குறித்து, மார்க் ஜுக்கர்பெர்க் அமெரிக்க மக்களிடம் மீண்டும், மீண்டும் பொய் கூறி வருகிறார். அவர் ஏராளமான மக்களை காயப்படுத்தி இருக்கிறார். இதற்கு அவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் இது தொடராமல் இருக்க வெறும் அபராதத்தோடு நிறுத்தாமல், மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும்” என கூறினார்.
Tags:    

Similar News