என் மலர்
நீங்கள் தேடியது "Mark Zuckerberg"
- ஒருவருக்கொருவர் பிறரின் வலைதளத்தை கிண்டல் செய்து வாக்குவாதம் செய்து வந்தனர்
- சார்ல்ஸ் ஷூமர் வாஷிங்டனில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்குகின்றன.
அமெரிக்காவில் இருந்து இயங்கும் பயனர்களின் உரையாடல்களுக்கான சமூக வலைதளம் டுவிட்டர். இதனை உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்கருமான எலான் மஸ்க், கடந்த 2022ல் விலைக்கு வாங்கினார். வாங்கியதும் அதன் பெயரை எக்ஸ் என மாற்றி, லாபத்தைப் பெருக்கும் நோக்கில் அதிரடியாக பல முடிவுகளை எடுத்து வந்தார்.
எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக வலைதளத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனரும், அமெரிக்காவை சேர்ந்தவருமான மார்க் ஜூகர்பர்க், கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.
இருவரும் மற்றவரின் சமூக வலைதளங்களின் தரம் குறித்து விமர்சனம் செய்து ஒருவருக்கொருவர் சமூக வலைதளங்களிலேயே வாக்குவாதம் செய்து வந்தனர்.
இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாட் ஜிபிடி (ChatGPT) எனும் மென்பொருள் செயலியை ஓப்பன்ஏஐ எனும் நிறுவனம் உருவாக்கி கடந்த நவம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. மிகவும் வெற்றியை அடைந்துள்ள இந்த செயலி, செயற்கை நுண்ணறிவை குறித்த ஒரு விவாதத்தையும் தூண்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவை மிகவும் அவசியமான மற்றும் ஆரோக்கியமான கண்டுபிடிப்பாக ஒரு சாரார் ஆதரித்து வர, மற்றொரு தரப்பினரோ செயற்கை நுண்ணறிவு ஆபத்தானது என்றும் அதன் பயன்பாட்டிற்கான எல்லைகளை அரசாங்கங்கள் வகுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
எலான் மஸ்க், ஏஐ பயன்பாடு ஒரு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வாதிட்டு வருகிறார். ஆனால், ஜூகர்பர்க் இது குறித்து நடுநிலையான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார்.
"கட்டுப்பாடில்லாத தொழில்நுட்ப வளர்ச்சி ஆபத்தானது. அது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் ஷூமர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளை வகுத்தல் குறித்து கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு சந்திப்பை வாஷிங்டனில் ஏற்பாடு செய்துள்ளார். செப்டம்பர் 13ல் நடக்கவிருக்கும் இந்த சந்திப்பில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
இதில், எலான் மஸ்கும், மார்க் ஜூகர்பர்கும் பங்கேற்க உள்ளனர்.
செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பலர் வேலை இழக்கும் அபாயம் தோன்றும் என அச்சம் நிலவுவதாலும், சமூக வலைதளங்களில் எதிரிகளைப் போல் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் மஸ்கும் ஜூகர்பர்கும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கப் போவதாலும், இந்தச் சந்திப்பு மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமல்லாமல், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
- திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர் மஸ்க்
- எலான் மஸ்க் சண்டையை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்றார் மார்க்
செய்தி, வீடியோ, ஒலி மற்றும் கோப்புகளை பிறருடன் பரிமாறி கொள்ளவும், பிறருடன் உரையாடவும் உலகின் முதன்மையான வலைதளமாக இருந்து வந்தது அமெரிக்காவை சேர்ந்த டுவிட்டர்.
இந்நிறுவனத்தை உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கி அதன் லாபத்தை அதிகரிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பல பழைய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து புது அதிகாரிகளை சேர்த்த மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் பெயரை அண்மையில் 'எக்ஸ்' என மாற்றினார்.
உலகின் மற்றொரு பிரபல சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக உரையாடல்களுக்கான வலைதளம் ஒன்றை தொடங்கினார்.
இதை விரும்பாத எலான் மஸ்க், திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, திரெட்ஸ் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்காப்பு கலை தெரிந்தவர் என்பதை அறிந்த எலான் மஸ்க் அவரை வம்பு சண்டைக்கு இழுத்தார். இதற்கு சளைக்காத மார்க் ஜூக்கர்பர்க், "சண்டைக்ககான இடத்தின் பெயரை அனுப்பவும்" என பதிலளித்திருந்தார்.
இவர்கள் இருவரும் இந்த சண்டை விசயமாக அவரவர் வலைதளங்களில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.
மூன்று நாட்களுக்கு முன் மார்க் இது குறித்து கூறியதாவது:-
தற்காப்பு கலைக்கு முக்கியம் கொடுப்பவர்களோடு மட்டுமே போட்டியிட போகிறேன். எலான் இதை தீவிரமாக எடுத்து கொள்ளாதவர். எலான் மஸ்க் மாற்றி மாற்றி பேசுகிறார்.
இவ்வாறு மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து எலான் மஸ்க் தற்போது தெரிவித்திருப்பதாவது:-
நான் முதலில் விளையாட்டுக்காகத்தான் மார்க்கை சண்டைக்கு இழுத்தேன். பிறகு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள் என மார்க் கூறியதும், இத்தாலியை நான் தேர்ந்தெடுத்தேன். மார்க் மறுத்ததால், அவர் வீடுதான் சரியான இடமா? என நான் கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. எங்காவது சண்டையிட அவர் தயாரா? எனவும் தெரியவில்லை.
இவ்வாறு மஸ்க் தற்போது கூறியிருக்கிறார்.
இவர்கள் இருவருக்குமிடையிலான சொற்போர் இத்துடன் நிற்குமா அல்லது உண்மையிலேயே சண்டையிடுவார்களா என இணைய ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.
- திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர்.
- திரெட்ஸ் அப்பில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர்.
தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது.
திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திரெட்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அதில் இணைந்துள்ளார்.
அத்துடன், திரெட்ஸ் அப்பில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
பில் கேட்சின் பதிவுக்கு ரியாக்ட் செய்துள்ள மார்க் ஜூக்கர்பர்க், ஆப்-ல் இணைந்தது நல்ல முயற்சி என்று பதிவிட்டுள்ளார்.
- பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
- மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் அடிப்படையிலானது என ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர்.
தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம். மக்கள் தங்களின் தகவல் மற்றும் லிங்க் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவிடலாம். பிறரிடமிருந்து வரும் தகவல்களுக்கு பதிலளிக்கலாம் அல்லது மறுபதிவு செய்யலாம்.
திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இந்நிலையில், திரெட்ஸ் சேவை தொடர்பாக டுவிட்டர் தளத்திலும் பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். பயனர்களுடன் இணைந்து டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டிருக்கிறார். ஒரு டுவிட்டர் பயனர் திரெட்ஸ் செயலியை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார். மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் இந்த கீபோர்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்த அந்த பயனர், கீபோர்டு போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார். அதில் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் பட்டன்கள் மட்டுமே இருந்தன.
இந்த பதிவை பார்த்த மஸ்க், சிரிக்கும் முகத்தின் எமோடிகானை பதிவிட்டு பதில் அளித்துள்ளார். இவ்வாறு மகிழ்ச்சியுடன் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டதன்மூலம், திரெட்ஸ் செயலியானது, டுவிட்டரின் பிரதி என்று கூறுவதுபோல் தெரிகிறது.
- ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.
- திரெட்ஸ் சேவை இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி ஆகும்.
மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைதளம் 'திரெட்ஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்கிறார். இவரின் இந்த போக்கு, எலான் மஸ்க்-க்கு நேரடி சவால்விடும் வகையில் இருப்பதாக தெரிகிறது. கடந்த காலங்களில் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜூக்கர்பர்க் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் இருந்ததே இதற்கு காரணமாகும்.
டுவிட்டர் போன்ற சமூக வலைதள சேவைக்கு இன்றும் சந்தை இருப்பதாக மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் நம்புகிறது. திரெட்ஸ் சேவை கடந்த வாரம் அதன் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தளத்தில் மூத்த பிராடக்ட் பிரிவு அலுவலராக க்ரிஸ் கோக்ஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

திரெட்ஸ் தொடக்கம்:
கடந்த ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன. புதிய சேவையை பயன்படுத்துமாறு உலக பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோக்ஸ் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் மட்டுமின்றி கிரியேட்டர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம்.

பாடுபடும் டுவிட்டர்:
டுவிட்டர் தளத்தினை உலகம் முழுக்க சுமார் 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, இந்த தளம் சரிவை சந்தித்து வருகிறது. டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளார். டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், மூத்த தலைமை அதிகாரியில் இருந்து பலரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.
இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான விளம்பரதாரர்கள் டுவிட்டரை விட்டு வெளியேறினர். இதன் காரணமாக டுவிட்டரின் வருவாய் படிப்படியாக குறைய தொடங்கியது. பிறகு வெரிஃபைடு அந்தஸ்தை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை அறிவிக்கப்பட்டு, தற்போது இது அமலில் இருக்கிறது.

மார்க் விருப்பம்:
இதுதவிர ஏராளமான நடவடிக்கைகள் காரணமாக டுவிட்டர் முழுமையாக மாறி போனது. சமீபத்தில் பயனர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களை பார்க்க முடியும் என்பதை கட்டுப்படுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த எண்ணிக்கை வெரிஃபைடு பெற்றவர்கள், பெறாதவர்கள், புதிய பயனர்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.
சமூக வலைதள உலகில் டுவிட்டர் ஏற்படுத்திய தாக்கம், மார்க் ஜூக்கர்பர்க்-ஐ பெரிதும் கவர்ந்தது. 2008-ம் ஆண்டு டுவிட்டரை விலைக்கு வாங்க மார்க் ஜூக்கர்பர்க் விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான், மார்க் தற்போது திரெட்ஸ் தளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த சேவையின் முதல் சவால், பயனர்கள் இதில் தங்களின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த விரும்புவார்களா என்பது தான்.

போட்டி நிறுவன சேவைகள்:
புதிய தளத்தில் அதிக பயனர்களை பெற, திரெட்ஸ் தளம் அவர்களுக்கு ஆரம்பத்தில் பல்வேறு வசதிகளை வழங்க வேண்டும். மற்றொரு பெரிய விஷயம் சமீப காலங்களில் டுவிட்டருக்கு போட்டியாக துவங்கப்பட்ட புளூஸ்கை, கடந்த திங்கள் கிழமை அன்று மட்டும் பயனர்கள் எண்ணிக்கையில் 20 சதவீதம் வளர்ச்சியை பெற்றது.
எனினும், அதிக பயனர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் புளூஸ்கை இன்வைட் முறையிலேயே இயங்கி வருகிறது. அதன்படி 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். இத்தனை சவால்களை எதிர்கொண்டே மெட்டா நிறுவனத்தின் புதிய திரெட்ஸ் சமூக வலைதளம் பயன்பாட்டுக்கு வருகிறது.
- மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
- சமீபத்தில் தான் மெட்டா நிறுவனத்தில் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன.
இந்த வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் மெட்டா பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறை எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனரோ, அதே எண்ணிக்கையில் மீண்டும் பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விரைவில் சுமார் 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய பணி நீக்க நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றும் மார்க் ஜூக்கர்பர்க் தனது மூன்றாவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்புக்கு செல்லும் முன் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் மார்க் ஜூக்கர்பர்க் 2023 ஆண்டு நிறுவனத்திற்கு சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
ஏற்கனவே ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம், கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஊழியர்களை கடந்த ஆண்டு மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்து இருந்தது. இவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பணியாற்றி வந்தனர். நிதி நெருக்கடி மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இறந்த மனைவிக்காக முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினார். ஆனால் பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ஷகர் பெர்க் உயிருடன் இருக்கும் தனது மனைவிக்காக மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார்.

காலை 6 மணிக்கும், 7 மணிக்கும் அந்த பெட்டி மங்கலா ஒளியை உமிழ்கிறது. காலையில் அவர் கண் விழித்து எழ வசதியாக 6 மணி மற்றும் 7 மணிக்கு பெட்டியில் இருந்து மங்கலான ஒளி கிளம்புகிறது. ஏனெனில் அப்போதுதான் ஷுகர்பெர்க்கின் மகள்கள் தூங்கி எழுந்து கண் விழிப்பார்கள்.
இந்த பெட்டி தங்களது நண்பர்கள் மத்தியிலும் பிரபலமாகி விட்டது என ஷூகர்பெர்க் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பயன்படுத்தும், வகையில் பிரபலப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். #MarkZuckerberg
மார்க் சூக்கர்பர்க் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு டாலர் எனும் மிகக்குறைந்த தொகையை வருவாயாக பெறுகிறார். 2017 ஆம் ஆண்டு மார்க் சூக்கர்பர்க் பாதுகாப்பிற்கு ரூ.62 கோடி செலவிடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இது பலமடங்கு அதிகரித்திருக்கிறது.
இதுதவிர தனியார் ஜெட் விமானங்களை பயன்படுத்தியதில் மார்க் சூக்கர்பர்க் ரூ.18 கோடி செலவிட்டிருக்கிறார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையீடு சார்ந்த பிரச்சனையில் சிக்கியது முதல் அந்நிறுவனம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

ஃபேஸ்புக்கின் மூத்த நிர்வாக அதிகாரியான ஷெரில் சாண்ட்பெர்க் 2018 ஆம் ஆண்டு ரூ.164 கோடிகளை வருவாயாக பெற்றிருக்கிறார். முந்தைய ஆண்டில் இவர் ரூ.174 கோடிகளை சம்பளமாக பெற்றிருந்தார். இதுதவிர நெட்ஃப்ளிக்ஸ் மூத்த அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் ஃபேஸ்புக்கின் நிர்வாக குழுவில் இருந்து விலகுவார் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் வீடியோக்களில் அதிக கவனம் செலுத்த துவங்கியிருப்பதை தொடர்ந்து ஹேஸ்டிங்ஸ் அந்நிறுவனத்தில் இருந்து விலகுகிறார். ஃபேஸ்புக் நிறுவன நிர்வாக குழுவில் 2011 ஆம் ஆண்டு முதல் ஹேஸ்டிங்ஸ் இடம்பெற்றிருக்கிறார். #Facebook

