செய்திகள்

பெரு நாட்டில் இரட்டை அடுக்கு பஸ் தீப்பிடித்த விபத்தில் 20 பேர் பலி

Published On 2019-04-01 08:49 GMT   |   Update On 2019-04-01 08:49 GMT
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து புறப்பட்டு சென்ற இரட்டை அடுக்கு பஸ்சில் தீப்பிடித்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்தனர். #PeruBusAccident
லிமா:

பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இருந்து சுமார் 100 பயணிகளுடன் சிக்லாயோ நகரை நோக்கி ஒரு இரட்டை அடுக்கு பஸ் இன்று புறப்பட்டு சென்றது. வழியில் சான் மார்ட்டின் டி போர்ரெஸ் மாவட்டத்தில் உள்ள நிறுத்தத்துக்குள் நேற்றிரவு நின்றிருந்த அந்த பஸ்சின் என்ஜின் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.



சில நொடிகளுக்குள் பஸ்சின் இருக்கைகள் வழியாக மளமளவென்று பரவிய தீயில் பயணிகள் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக, மேல் அடுக்கு படுக்கையில் இருந்த பயணிகள் கீழே இறங்கி வர முடியாமல் தவித்தனர். இதற்குள் பயங்கர சப்தத்துடன் பஸ்சின் ஒரு பகுதி வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். காயங்களுடன் பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #PeruBusAccident
Tags:    

Similar News