search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரு நாடு"

    • நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
    • உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.

    பிரேசிலியா:

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்துக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரேசில் வீரர் மார்கினோஸ் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.

    இந்த ஆட்டத்திற்கு முன்னதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பெரு நாட்டு மாந்திரீகர்கள் தங்கள் நாட்டின் வெற்றிக்காக ஆசீர்வாதங்களைக் கோரி, சடங்குகள் செய்து பிரார்த்தனை செய்தனர். இதில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்டவர் என்பதால் அவர் கோல் அடிப்பதைத் தடுக்க தனித்துவமான சடங்குகளைச் செய்தனர்.

    நெய்மர் படத்தின் மீது பழுப்பு நிற துணியை போர்த்தி, அவரது இடது காலை கட்டி, வலது காலின் மேல் ஒரு வாளை வைத்து வழிபாடு செய்தனர். எனினும்,பெருவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நெய்மர் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.

    நெய்மர் படத்தை வைத்து சடங்குகள் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    ×