செய்திகள்

சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

Published On 2019-02-04 01:27 GMT   |   Update On 2019-02-04 01:27 GMT
80 ஆயிரம் கழுதைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #China #Pakistan #Donkey
இஸ்லாமாபாத்:

உலக அளவில் கழுதைகள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3-வது இடத்தில் இருக்கிறது. இங்கு 50 லட்சத்துக்கும் அதிகமான கழுதைகள் வாழ்கின்றன. சீனாவை பொறுத்த மட்டில் பாரம்பரிய மருந்துகளை தயார் செய்ய கழுதைகள் தேவைப்படுவதால் அங்கு கழுதைகளின் விலை உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில் கழுதைகள் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் முதல் இடத்தில் இருக்கும் சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளது. இதற்காக பாகிஸ்தானில் கழுதை பண்ணைகளை அதிகப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் 80 ஆயிரம் கழுதைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  #China #Pakistan #Donkey
Tags:    

Similar News