search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "donkey"

    • வாயில்லா பிராணியான கழுதையை வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்குகிறார்.
    • கழுதையும் அடி வாங்கிய படி கத்துகிறது. இருந்தும் அந்த வாலிபர் கழுதையை விடவில்லை. மீண்டும், மீண்டும் அடித்து உதைக்கிறார்.

    புதுடெல்லி:

    தமிழில் தன்வினை தன்னை சுடும் என ஒரு முதுமொழி உண்டு.

    தவறு செய்தால் உடனடி தண்டனை

    இதுபோல தவறு செய்தால் தண்டனை உடனே கிடைக்கும் என்பது இப்போது நடைபெறும் பல சம்பவங்கள் மூலம் நிரூபணம் ஆகி வருகிறது.

    இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் வாயில்லா பிராணியான கழுதையை வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்குகிறார்.

    அந்த கழுதையும் அடி வாங்கிய படி கத்துகிறது. இருந்தும் அந்த வாலிபர் கழுதையை விடவில்லை. மீண்டும், மீண்டும் அடித்து உதைக்கிறார்.

    அனைத்து அடிகளையும் அழுதபடி வாங்கி கொள்கிறது கழுதை. அதன்பின்பு அந்த வாலிபர், கழுதையின் முதுகில் ஏறுகிறார். அப்போது அந்த கழுதை தனது வேலையை காட்ட தொடங்குகிறது.

    தன் மீது ஏறி அமர்ந்த வாலிபரின் காலை திடீரென கவ்வி கொள்கிறது. அதோடு கடித்து குதறி வாலிபரை கீழே தள்ளுகிறது. அதன்பின்பும், அந்த வாலிபரை சுழற்றி, சுழற்றி தாக்குகிறது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் தன்வினை தன்னை சுடும் என்பதற்கு உதாரணம் என்ற தலைப்புடன் வெளியாகி உள்ள இந்த வீடியோவுக்கு பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

    • அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
    • கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு.

    மங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் கவுடா. இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஸ்ரீநிவாஸ் கவுடா கழுதை பண்ணை திறப்பதற்காக தனது ஐடி பணியை ராஜினாமா செய்துள்ளார்.

    தற்போது, மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரமும் செய்து வருகிறார் கழுதை பண்ணை உரிமையாளரான ஸ்ரீநிவாஸ் கவுடா.

    இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் கவுடா கூறியதாவது:-

    நான் முன்பு 2020-ம் ஆண்டு வரை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். இது இந்தியாவிலும் கர்நாடகாவிலும் உள்ள முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஆகும்.

     தற்போது எங்களிடம் 20 கழுதைகள் உள்ளன. நான் சுமார் 42 லட்சம் ரூபாய் மூதலீடு செய்துள்ளேன். அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு. கழுதைப்பால் பல நன்மைகள் கொண்ட மருந்தாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×