செய்திகள்

உலகமே உற்றுநோக்கும் வரலாற்றில் எழுதக்கூடிய அந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடக்க உள்ளது

Published On 2018-05-10 15:42 GMT   |   Update On 2018-05-10 15:42 GMT
எதிரும் புதிருமாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். #Trump #KimJongUn
வாஷிங்டன்:

அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத பரிசோதனை என சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது தனது சேட்டைகளை மூட்டை கட்டி வைத்து மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார்.

கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் கிம் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

டிரம்ப் - கிம் சந்திப்பு நடத்த பல்வேறு நகரங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் கிம் ஜாங் அன்னை சந்திக்க உள்ளேன். உலக அமைதிக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் சிறப்பு மிக்க தருணம் என டிரம்ப் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Trump #KimJongUn
Tags:    

Similar News