செய்திகள்

வடகொரியா உடன் எண்ணெய் பரிமாற்றமா?: டிரம்ப் குற்றச்சாட்டை மறுக்கும் சீனா

Published On 2017-12-29 11:59 GMT   |   Update On 2017-12-29 11:59 GMT
பல்வேறு பொருளாதார தடைகளுக்கு உள்ளான வடகொரியாவுக்கு மறைமுகமாக எண்ணெய் பரிமாற்றம் செய்ததாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
பீஜிங்:

உலக நாடுகளின் கண்டனத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை செய்து வருவதால் வடகொரியா மீது ஐ.நா பல்வேறு பொருளாதார தடைகள் விதித்துள்ளது. இதில், எண்ணெய், நிலக்கரி ஏற்றுமதி தடையும் அடங்கும்.

இந்நிலையில், சீனா கப்பல்கள் மூலமாக வடகொரியாவுக்கு கப்பல்கள் மூலமாக மறைமுகமாக எண்ணெய் பரிமாற்றம் செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, டிரம்ப் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யின்ங், தனிநபரோ அல்லது கம்பெனிகளோ இது போன்ற செயலில் ஈடுபட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அந்த பகுதியில் சீன கப்பல்கள் சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்று ஹுவா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News