செய்திகள்

சிரியா: வான்வழித் தாக்குதலில் 19 பொதுமக்கள் பலி - போர் கண்காணிப்பு அமைப்பு தகவல்

Published On 2017-12-20 11:51 GMT   |   Update On 2017-12-20 11:51 GMT
சிரியாவின் இத்லிப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 19 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக இங்கிலாந்தைச் சேர்ந்த போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ்:

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு ஆயுதங்கள் தரப்போவது இல்லை என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ அறிவித்தது.

கடந்த வாரம் சிரியாவில் உள்ள தன்நாட்டு படைகளை வாபஸ் பெறப்போவதாக ரஷ்யா அதிபர் புதின் கூறியிருந்தார். இந்நிலையில், சிரியாவின் இத்லிப் பகுதியில் நேற்றிரவு வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 19 பொது மக்கள் பலியானதாக இங்கிலாந்தைச் சேர்ந்த போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News