செய்திகள்

ஆசியாவின் எதிர்கால நலன்களுக்கு நாங்கள் உழைக்கிறோம்: டிரம்ப் உடனான சந்திப்பில் மோடி பேச்சு

Published On 2017-11-13 09:27 GMT   |   Update On 2017-11-13 09:27 GMT
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் ஏசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மணிலா:

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏசியான் கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு இன்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

மாநாட்டு இடைவேளையின் போது, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



இதனையடுத்து, பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு முன்னோக்கி செல்லும் வகையில் வளர்ந்து கொண்டே உள்ளது. ஆசியாவின் எதிர்கால நலம், மனித வளத்திற்காக நாங்கள் உழைக்கின்றோம்’ என கூறினார்.

முன்னதாக நேற்று இரவு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ அளித்த இரவு விருந்தின் போது, இருவரும் சந்தித்து சிறிது நேரம் உரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News