செய்திகள்

பெஷாவர் பள்ளி மீது தாக்குதல் நடத்திய தலிபான் தளபதி கொல்லப்பட்டான்

Published On 2017-10-18 13:53 GMT   |   Update On 2017-10-18 13:53 GMT
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ராணுவ பள்ளிக்குள் தாக்குதல் நடத்தி 144 பேரை கொல்ல திட்டமிட்டுதந்த தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பெஷாவர் பள்ளிக்குள் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் 132 மாணவ-மாணவிகள் உள்பட 144 பேரை கொன்று குவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதி கலிபா உமர் மன்சூர் கொல்லப்பட்டதாகவும், அவனது பதவியில் உஸ்மான் மன்சூர் ஹபீசுல்லா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், டர்ரா, ஆடம் கேல், பெஷாவர் ஆகிய பகுதிகளின் தலிபான்களின் தளபதியாக இவர் செயல்படுவார் என்றும் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் முஹம்மது கோரஸ்ஸானி அறிவித்துள்ளார்.

பெஷாவர் பள்ளி மட்டுமின்றி, பச்சாகான் பல்கலைக்கழகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் முன்னர் பொறுப்பேற்றிருந்த கலிபா உமர் மன்சூர் கடந்த ஆண்டில் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த செய்தியை தலிபான்கள் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியில் நேற்று முன்தினம் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 26 அதிபயங்கர தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின, இதையடுத்து, கலிபா உமர் மன்சூரின் மரணத்தை தலிபான்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News