செய்திகள்

ஸ்பெயின்: வன்முறை தூண்டும் வகையில் பேச்சு - 2 கட்டலோன் தலைவர்கள் சிறையில் அடைப்பு

Published On 2017-10-16 21:53 GMT   |   Update On 2017-10-16 21:53 GMT
வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் இரண்டு கட்டலோனியா ஆதரவு தலைவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட்டுள்ளது.
பார்சிலோனா:

ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கட்டலோனியா தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த 1-ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தனிநாடாக பிரிவது உறுதி என கட்டலோனியா தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்த வாக்கெடுப்பிற்கு முன்னர் செப்டம்பர் 20-21ம் தேதிகளில் கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கட்டலோனியா ஆதரவு தலைவர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் அலுவலகங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நேற்று மாட்ரிட் கோர்ட்டில் நடந்தது. இந்த விசாரணை முடிவில் கட்டலோன் தலைவர்களான ஜோர்டி சன்செஸ் மற்றும் ஜோர்டி கியுசார்ட் ஆகிய இரண்டு பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி கூறினார். இதையடுத்து அவர்கள் இருவரையும் ஜாமினில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான மற்ற இரண்டு பேர் நிபந்தனைகளில் பேரில் விடுவிக்கப்பட்டனர். அவர்களது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News