செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயாராகிறது, வடகொரியா

Published On 2017-10-14 10:39 GMT   |   Update On 2017-10-14 10:39 GMT
அமெரிக்கா - தென்கொரியா கடற்படை கூட்டுப் போர் பயிற்சிக்கு தேதி குறித்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த ஏவுகணை பரிசோதனைக்கு வடகொரியா தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோல்:

வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா - தென்கொரியா கடற்படை வீரர்கள் அடுத்த வாரம் கூட்டுப் போர் பயிற்சிக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், அதே வேளையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த ஏவுகணை பரிசோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாக தென்கொரியா நாட்டு நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

வடகொரியா தலைநகர் பியாங்யாங் மற்றும் வடக்கு போங்கியான் மாகாணங்களுக்கு ஏவுகணைகளை ஏவும் கவன்களை ரகசியமாக அனுப்பி வைக்கப்படும் செயற்கைக்கோள் படங்களுடன் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது செலுத்தப்படும் ஏவுகணையானது, அமெரிக்காவின் அலாஸ்கா நகரம் வரை செல்லக்கூடிய ஹ்வாஸாங்-14 எனப்படும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம்.

அல்லது, ஜப்பான் கடல் பகுதியில் குவாம் தீவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை தாக்கும் ஆற்றல் கொண்ட ஹ்வாஸாங்-12 ரக மத்தியரக ஏவுகணையாக இருக்கலாம். அல்லது, இவை இரண்டைவிட அதிக ஆற்றலுடன் அமெரிக்காவின் கடல் பகுதிவரை சென்று தாக்கக்கூடிய ஹ்வாஸாங்-12 என அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளன,

கூட்டுப் போர் பயிற்சிக்காக அணு ஆயுதங்களுடன் கூடிய அமெரிக்க நீர்மூழ்கி கப்பலான யூ.எஸ்.எஸ். மிச்சிகன் நேற்று தென்கொரியாவுக்கு வந்துள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த தகவல் கொரிய தீபகற்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News