செய்திகள்

போலீஸ் தாக்கியதில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு: இஸ்ரேலுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம்

Published On 2017-07-22 15:46 GMT   |   Update On 2017-07-22 15:46 GMT
ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியின் வெளியே போராடிய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்:

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமான அல் அக்சா மசூதி உள்ளது. இங்கு பாலஸ்தீனைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பிராத்தனையில் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம் இந்நகரில் பாதுகாப்பு பணியிலிருந்த இஸ்ரேலிய பெண் போலீஸ் அதிகாரி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்.

இதனால், மசூதிக்கு வெளியே மெட்டல் டிடெக்டர்கள் அமைத்து இஸ்ரேலிய போலீசார் அனைவரையும் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாலஸ்தீனைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் அங்கு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில், 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கைக்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக திரண்டிருந்த எங்கள் சகோதரர்கள் மீது இஸ்ரேல் அதிகப்படியான படை பலத்தை பிரயோகிப்பது கண்டிக்கத்தக்கது என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News