செய்திகள்

பிரான்ஸ்: எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக நியமித்தார் அதிபர் மெக்ரான்

Published On 2017-06-20 00:06 GMT   |   Update On 2017-06-20 00:06 GMT
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிபர் மெக்ரான், முன்னர் பிரதமராக நியமித்த எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார்.
பாரிஸ்:

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிபர் மெக்ரான், முன்னர் பிரதமராக நியமித்த எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி ஓராண்டுக்குள் வெற்றி வாகை சூடினார். அதிபராக பதவியேற்றதும் வலதுசாரி கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவரான எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக மெக்ரான் தேர்வு செய்தார்.

இதனையடுத்து, பாராளுமன்றத்திற்கும் உடனடியாக தேர்தல் நடத்த அதிபர் மெக்ரான் முடிவு செய்தார். அதன்படி, கடந்த 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரான்ஸ் பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 577 ஆகும். அவற்றுக்கு நடந்த வாக்குப்பதிவில் பெரும்பான்மையான இடங்களில் அதிபர் மெக்ரானின் செஞ்சுறிஸ் கட்சி வெற்றி பெற்றது.

பிரான்சை பொறுத்த வரை எம்.பி., தேர்தலில் போட்டியிடுபவர்கள் 50 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும். இதற்காக 2 கட்டமாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் 50 சதவீத ஓட்டு கிடைக்காவிடில் குறைந்த ஓட்டுகள் பெற்றவர்கள் நீக்கப்பட்டு முன்னணியில் இருப்பவர்கள் மீண்டும் போட்டியிடுவார்கள். அவர்களில் 80 சதவீதம் வாக்குகள் பெறுபவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

முதல் சுற்று தேர்தலை வைத்து எத்தனை எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர் என கணிக்க முடியாது. எனவே நேற்று முன்தினம் 2-வது சுற்று தேர்தல் நடந்தது. அதில் ஏற்கனவே நடந்த தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்றவர்கள் மட்டும் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவுகளில் அதிபர் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 350 இடங்கள் வரை கைப்பற்றியது. இந்நிலையில், புதிய பிரதமராக எடோர்ட் பிலிப்-ஐ மீண்டும் அதிபர் மெக்ரான் நியமித்துள்ளார். மேலும், புதிய  அமைச்சரவையை நாளைக்குள் அமைக்கும்படி கோரியுள்ளார், 
Tags:    

Similar News