செய்திகள்

டொனால்ட் டிரம்ப்பின் அடுத்த அதிரடி: அகதிகளில் கிறிஸ்தவர்களுக்கே முன்னுரிமை

Published On 2017-01-28 06:04 GMT   |   Update On 2017-01-28 06:04 GMT
அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பிக்கும் சிரியா நாட்டு அகதிகளில் கிறிஸ்தவ இனத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

சமீபத்தில் கிறிஸ்தவ தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த டொனால்ட் டிரம்ப், ‘சிரியாவில் இருந்துவரும் நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால் தாராளமாக அமெரிக்காவுக்குள் வரலாம், கிறிஸ்தவர்களாக இருந்தால் வரவே முடியாது என்ற காரணம் நியாயமானது அல்ல.

எல்லோருடைய தலைகளையும் வெட்டுவதுபோல் கிறிஸ்தவர்களும் சிரியாவில் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். எல்லோருக்கும் எல்லா நியாயங்களும் வாய்ப்புகளும் அளிக்கப்பட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் சிரியாவில் இருந்து வந்த அகதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை 38,901 ஆகவும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 37,521 ஆகவும் அமெரிக்க குடியுரிமைத்துறை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News