செய்திகள்
தமிழக அரசு

திறக்க தடை விதிக்கப்பட்ட பெரிய கடைகள் எவை? - தமிழக அரசு விளக்கம்

Published On 2021-04-28 03:25 GMT   |   Update On 2021-04-28 03:25 GMT
கொரோனா பரவல் அதிகரித்தது தொடர்பாக, அனைத்து பெரிய கடை நிறுவனங்கள் கடந்த 26-ந்தேதியில் இருந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று அரசு கடந்த 24-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
சென்னை:

தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பரவல் அதிகரித்தது தொடர்பாக, அனைத்து பெரிய கடை நிறுவனங்கள் கடந்த 26-ந்தேதியில் இருந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று அரசு கடந்த 24-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. மிகப்பெரிய கடைகள் என்று எந்த கடைகளை குறிப்பிட வேண்டும் என்று கலெக்டர்கள் பலர் சந்தேகங்களை எழுப்பி அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

இந்த சந்தேகங்களுக்கு அரசு தற்போது விளக்கம் அளிக்கிறது. அதன்படி, 3 ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேல் அளவுள்ள ஷோரூம் கொண்ட கடைகள் அனைத்தும் பெரிய அளவிலான கடைகள் என்று கருதப்படும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News