செய்திகள்
குமரி மாவட்ட கலெக்டர்

மின் கட்டணத்தை எந்தவொரு அபராதம் இன்றி கட்டலாம் - கலெக்டர் பிரசாந்த் தகவல்

Published On 2020-05-26 11:18 GMT   |   Update On 2020-05-26 11:18 GMT
குமரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை மின் கட்டணத்தை எந்தவொரு அபராதம் இன்றி கட்டலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மின் கட்டணம் செலுத்து வதற்குரிய தேதியை தமிழக அரசு உத்தரவின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வருகிற ஜூன் (6-ந்தேதி) வரை எந்தவித அபராதமும் இன்றி கட்டலாம் என அறிவித்துள்ளது. மற்றபடி எந்தவித கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை.

மின்கட்டண கணக்கீடு செய்யும்போது நான்கு மாத கணக்கீட்டை இரண்டு மாத கணக்கீடாக பிரித்து ஏற்கனவே கட்டிய தொகை போக மீதமுள்ள தொகை மட்டும்தான் வசூல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் நுகர்வோருக்கு இது சம்பந்தமாக ஏதாவது தெளிவு தேவைப்படின் அந்த பகுதியில் உள்ள பிரிவு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் இன்று 18 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. மொத்தத்தில் இதுவரை 7934 வழக்குகளும், 8906 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News