செய்திகள்
திருமாவளவன்

நல்ல தலைவர்களை உருவாக்க ஆசிரியர்களால் தான் முடியும்- திருமாவளவன் பேச்சு

Published On 2019-09-11 11:17 GMT   |   Update On 2019-09-11 11:17 GMT
நல்ல தலைவர்களை உருவாக்க ஆசிரியர்களால் தான் முடியும் என்று ஆரணியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் திருமாவளவன் பேசியுள்ளார்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஜி.பி.சி. கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் ஜி.பி.சி. கல்வி நிறுவனர் பிரபாகரன் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் பிரேமா அனைவரையும் வரவேற்றார் ரேணுகாம் பாள் கல்விகுழும செயலாளர் டாக்டர்.பிரேமா முன்னிலை வகித்தார்.

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று 125 பேருக்கு பல்வேறு பல்கலை கழகங்களில் பயின்று படிப்பை முடித்த 125 பேருக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

ஓட்டுனர்கள் ஓவியர்கள் நடத்துனர்கள் உள்ளிட்ட அனைத்து பணிக்கும் பயிற்சி பள்ளி உள்ளது. ஆனால் நல்ல தலைவர்கள் தானாக வருகின்றனர். தேசத்தை வழிநடத்தகூடிய தலைவர்கள் உருவாக்க எந்த நிறுவனமும் இல்லை. ஆகையால் நல்ல தலைவர்களை உருவாக்க ஆசிரிய பெருமக்கள் தான் தலைவராக உள்ளனர்.

இந்த பட்டமளிப்பு விழா மட்டுமல்ல ஜி.பி.சி. நிறுவனரின் 25-ம் ஆண்டு திருமணநாள் ஆகையால் இது முப்பெரும் விழா சிறப்புடைந்துள்ளன. 

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் 150-க்கும் மேற்பட்டபட்டதாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஆரணி தொகுதி செயலாளர் முத்தமிழ், மாவட்ட துணைசெயலாளர் சார்லஸ், நகரசெயலாளர் ரமேஷ் மற்றும் பட்டதாரிகள் பங்கேற்றனர். முடிவில் ஆசிரியர் சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News