செய்திகள்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது- அர்ஜூன் சம்பத்

Published On 2018-10-02 10:29 GMT   |   Update On 2018-10-02 10:29 GMT
சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். #Sabarimala #ArjunSampath
திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோர்ட் பல முறை உத்தரவிட்டும், உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். தேர்தல் நடத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் தான் மதுவினால் அதிக இளம் விதவைகள் உள்ளனர். திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக தமிழகத்தில் ஆன்மிக அரசியல் கொண்டு வர ராமராஜ்யம் பிரச்சார யாத்திரை நடத்தி வருகிறோம்.

சபரிமலையில் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது. 10 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் போகலாம் என சட்டத்தில் உள்ளது. ஆனால் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு செல்லலாம் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது அய்யப்ப பக்தர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இந்து கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு கோர்ட் தலையிடாமல் இருப்பதற்கு பாராளுமன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #ArjunSampath
Tags:    

Similar News