செய்திகள்

தருமபுரி வழியாக திருப்பதி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2018-05-14 05:43 GMT   |   Update On 2018-05-14 05:43 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தருமபுரி வழியாக திருப்பதி செல்வதையொட்டி அம்மாவட்டம் முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தருமபுரி:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். இதற்காக அவர் இன்று பிற்பகலில் சேலத்தில் இருந்து காரில் புறப்படுகிறார்.

ஓமலுர், தொப்பூர், தருமபுரி பை-பாஸ், கெரகோடஅள்ளி, காரிமங்கலம், கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக திருப்பதி சென்று அங்கு தங்குகிறார்.

முன்னதாக இன்று பிற்பகலில் தருமபுரி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெரகோட அள்ளியில் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் அ.தி.முக.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

முதல்-அமைச்சர் தருமபுரி வழியாக திருப்பதி செல்வதையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தலைமையில் தருமபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி மற்றும் 324 போலீசார், ஊர் காவல் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி- கிருஷ்ணகிரி- பெங்களூரு பை-பாஸ் சாலையில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளிலும், போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து வாகனங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News