செய்திகள்

தடை காலத்தை முன்னிட்டு 15-ந்தேதி முதல் மீன்பிடிக்க தடை

Published On 2018-04-07 09:01 GMT   |   Update On 2018-04-07 09:01 GMT
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது.
ராமேசுவரம்:

மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 60 நாட்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.

இந்த காலத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது.

இந்த காலக்கட்டங்களில் தமிழக கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி கடல்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள் வேலை இழப்பார்கள்.

மீன்பிடி தொழிலை சார்ந்த மீன்கம்பெனிகள், ஐஸ் கம்பெனிகள் மூடப்படும். மீன்பிடி தடை காலத்தில் நாட்டு படகுகளுக்கு மட்டுமே மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும்.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்படும்.

இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகளை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.
Tags:    

Similar News