செய்திகள்

கிரண்பேடி மத்திய பா.ஜனதா அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்- அன்பழகன் குற்றச்சாட்டு

Published On 2018-04-02 12:25 GMT   |   Update On 2018-04-02 12:25 GMT
புதுவை கவர்னர் கிரண்பேடி மத்திய பா.ஜனதா அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டும் மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

இதே போல புதுவை அரசு சார்பிலும் மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர கவர்னரிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு கவர்னர் கிரண்பேடி அனுமதி தர மறுத்துள்ளார்.

இதையடுத்து அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. மூலம் வழக்கு தொடர புதுவை அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் உரிமையை பெறாமல் தனி நபர் மூலம் வழக்கு தொடர்வது முன் உதாரணமாகி விடும்.

மாநில அரசின் உரிமையை விட்டு கொடுக்கும் நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

தொடக்க நிலையில் இருந்தே காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக நாராயணசாமி செயல்பட்டு வருகிறார்.

இதே போல் கவர்னர் கிரண்பேடி மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News