செய்திகள்
மலேசிய பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 185 கிராம் தங்க வளையல்கள்.

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

Published On 2018-03-16 03:56 GMT   |   Update On 2018-03-16 03:56 GMT
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 185 கிராம் தங்கத்தை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அரசு மற்றும் தனியார் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தல் தொடர் கதையாகி வருகிறது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் நேற்று காலை வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினர் மற்றும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.

அப்போது மலேசிய நாட்டை சேர்ந்த கடிசாடேல் பிந்தி என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரது உடைமைகளை தீவிரமாக சோதனை போட்டனர்.

இதில் அவரது உடைமைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 185 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தை அந்த பயணி வளையல்களாக மாற்றி எடுத்து வந்திருந்தார்.

கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் சம்பவம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News