செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வதை படத்தில் காணலாம்.

குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்தது - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Published On 2018-03-15 10:07 GMT   |   Update On 2018-03-15 10:07 GMT
குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று மாலை மழை குறைந்ததால் அருவிகளிலும் வெள்ளம் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
தென்காசி:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. கோடைவெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டியதால் மக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்தது.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் அனைத்து அனைத்து அருவிகளிலும் கடந்த 2 மாதமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையினால் குற்றாலம், பாபநாசம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் மெயின் அருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபப்ட்டது. இந்த நிலையில் நேற்று மாலை குற்றாலம் மலைப்பகுதியில் மழை குறைந்தது.

இதனால் அருவிகளிலும் வெள்ளம் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டார்கள். இன்று காலையும் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் மிதமான அளவு தண்ணீர் விழுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். சீசன் முடிந்துவிட்டதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. #tamilnews



Tags:    

Similar News