செய்திகள்

சாலை விபத்தில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: முதலமைச்சர் உத்தரவு

Published On 2018-02-21 06:11 GMT   |   Update On 2018-02-21 06:11 GMT
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சிறுனமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த வாகனமும், தனியார் பேருந்தும், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், பரிமளம், சின்னபொன்னு, பஞ்சமி, துலுக்காணம், முத்தம்மாள், ராஜாகன்னி, இந்திரா, சுமித்ரா மற்றும் ஆலவட்டான் ஆகிய ஒன்பது நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

எனது உத்தரவின் பேரில், அமைச்சர் பென்ஜமின், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டு, இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதையும் உறுதி செய்தனர்.

மேற்கண்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Tamilnews
Tags:    

Similar News