search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி உதவி"

    • ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.
    • 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

    இதையடுத்து ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்தது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. இதில் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த முகமை மீதான குற்றச்சாட்டையடுத்து சில ஊழியர்களை ஐ.நா. பணிநீக்கம் செய்தது.

    இந்நிலையில் ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா, இங்கிலாந்து அறிவித்தன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, "இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அமைப்புக்கு நிதிஉதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தது. இதே கருத்தை இங்கிலாந்தும் தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதிஉதவியை நிறுத்துவதாக மேலும் 7 நாடுகள் அறிவித்தது. கனடா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிதிஉதவி அளிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. நிதிஉதவியை நிறுத்தியதற்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தலைவர் பிலிப் லாசரினி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்" என்றார்.

    • விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு, விமல், அனுஷ்கா, ஜெனிபர் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    • 2024ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.5 சதவீதம் குறைய உள்ளதாக எச்சரித்தது ஐஎம்எஃப்
    • அத்தியாவசிய பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது

    கடந்த ஜூலை மாதம், பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, வாஷிங்டனை மையமாக கொண்ட ஐஎம்எஃப் (IMF) எனும் சர்வதேச நிதி நாணயம், $1.2 பில்லியன் வழங்கியிருந்தது.

    பாகிஸ்தானின் பொருளாதார நிலையை ஆய்வு செய்த ஐஎம்எஃப், தற்போது $700 மில்லியன் நிதியுதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த டிசம்பர் மாதம், இது குறித்து முடிவெடுக்கவிருந்த அதன் செயற்குழு சந்திப்பு, தள்ளி போடப்பட்டது. தொடர்ந்து, வரும் ஜனவரி 11 அன்று இது குறித்து ஆலோசிக்க உள்ளது.

    பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இவ்வருடம் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள ஆணையம், அதிகரிக்கும் விலைவாசியினால் பொருளாதாரம் நிலையற்றதன்மையை அடைந்திருப்பதாக எச்சரித்துள்ளது.

    கடந்த 2023 டிசம்பர் 22 காலகட்டத்தில், அந்நாட்டின் மத்திய வங்கியில் டாலர் கையிருப்பு $853 மில்லியன் அளவிற்கு உயர்ந்தது. இது ஐஎம்எஃப் விதித்திருந்த இலக்கை விட பாகிஸ்தான் கரன்சியில் ரூ.43 பில்லியன் அதிகம்.

    கடந்த நவம்பர் மாதம், அந்நாட்டு நிதியமைச்சர், "மிக விரைவாக நிதியுதவி தேவைப்படுகிறது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டே நிதியுதவி வழங்கினாலும், அதற்கு ஈடாக பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இவற்றை கடைபிடித்தாக வேண்டிய கட்டாயத்தால் பாகிஸ்தான் பல இலவசங்களையும், மானியங்களையும் நிறுத்தியுள்ளது.

    இதன் விளைவாக பால், உணவு, பெட்ரோல், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வரலாறு காணாத உயர்வு அங்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அங்கு சில வாரங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இவையனைத்தும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கலெக்டர் தகவல்
    • வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விலங்குகள் நலனில் பாதுகாப்பு மற்றும் சேவை செய்யும் அக்கறை யுள்ள அமைப்புகள் கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்திட நிதி உதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை அளிப்பதற்கு நிதி உதவி, தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திட கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி போன்ற பணிகளை மேற்கொள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் நிதி உதவி பெற்றிட https://cms.tn.gov.in/sites/default/files/announcement/ahf_TNAWB_041122.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது.
    • சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கொரநாட்டுக் கருப்பூர் ஊராட்சி, கீழத் தெருவில் வசித்து வரும் கவிதா சேகர் மற்றும் ஞானமணி, அருள்தாஸ் ஆகியோரது குடிசை வீடுகள் தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டு, மிகவும் பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி, ஆறுதல் கூறினார். மேலும் அரசு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்தார்.

    நிகழ்வில், கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி, துணைத் தலைவர் சரவணன், மாவட்ட திமுக பிரதிநிதி உதயம் கோவிந்த், ஒன்றிய அவைத்தலைவர் அபிராமிசுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள் பாஸ்கர், உலகநாதன், கருணாகரன், பழனிசாமி, சுரேஷ், பாலையா, ரமேஷ் உள்ளனர்.

    • கருப்பசாமி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
    • ஊராட்சி தலைவர் சத்யராஜ் கருப்பசாமி குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசை ஊராட்சியில் சுமார் 30 வருடங் களாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒய்வு பெற்ற கருப்பசாமி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார். அவரது குடும்பத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு தனது சொந்த நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரத்தை நேரில் வழங்கினார். அப்போது உடன் துணை தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் உள்ளனர்.

    • நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.
    • காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

    முத்தூர்:

    காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

    காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தவர் பழனி. இவர் கடந்த 4-ந் தேதி இயற்கை எய்தினார். இவரது மனைவியும் காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நகராட்சி 11-வது வார்டு பொதுமக்களின் உதவியோடு ரூ.35 ஆயிரம் நிதி சேகரிக்கப்பட்டு அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கயம் நகர்மன்ற உறுப்பினர் கே.டி.அருண்குமார் பங்கேற்று, பழனியின் குடும்பத்தினருக்கு மேற்கண்ட தொகையை வழங்கினார். மேலும் நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.

    • குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் போலீசார் ரூ.3.75 லட்சம் நிதி திரட்டினர்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், சதீஷ் மனைவி அனிஷிதாவிடம் வழங்கி ஆறுதல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, படிச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (வயது 45). இவா் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக வேலை பார்த்தார். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.

    இந்த நிலையில் சதீஷ் கடந்த 13-ந்தேதி காலை சுள்ளியோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சேரம்பாடிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது லாரி மோதியதில் சதீஷ் உயிரிழந்தாா்.இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார், விபத்தில் இறந்த சதீஸ் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் ரூ.3.75 லட்சம் நிதியை திரட்டினர். தொடர்ந்து அந்த தொகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், சதீஷ் மனைவி அனிஷிதாவிடம் வழங்கி ஆறுதல் கூறினாா்.

    • ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த தமிழ்ச்செல்வன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • உயிரிழந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் வட்டம், தேவனாம்பட்டினம் கிராமம் கடற்கரை சாலையில் நேற்று மதியம் அப்பகுதியிலுள்ள கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் கல்லூரி முடிந்து ஷேர் ஆட்டோவில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பண்ருட்டி வட்டம், சிறுவத்தூர் (அ), மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 20) என்ற மாணவர், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    உயிரிழந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தமகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.40 லட்சம் நிதி
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டு அவர்கள் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் .

     திருச்சி, 

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வட்டார வணிக வளமையம் மூலம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 80 பேருக்கு ரூ. 40 லட்சம் நிதியை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ்குமார்,ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், துணை தலைவர் சண்முகம், மகளிர் திட்ட ஏ.பி.ஓ. நிர்மலாதேவி, டி.ஆர்.பி. தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,

    பெண்கள் வருங்காலத்தில் தொழில் அதிபர்களாக வரவேண்டும் என்ற இலக்கை விதைத்து உங்களுடைய முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான வழிகாட்டுதலை அரசு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் . கலைஞர் தான் தருமபுரியில் முதன் முதலில் மகளிர் சுய உதவி குழுவை ஆரம்பித்தார். அதன் பிறகு தற்போதைய தமிழக முதல்வர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது பல லட்சக்கணக்கில் மகளிர்உதவி குழு எண்ணிக்கையை பெருக்கினார்.

    தற்போது சிறப்பு திட்டம் செயலாக்கும் என்பதை அமைச்சர் உதயநிதி தான் மகளிர் சுய உதவி குழுவிற்கு தேவையான நிதிகளை ஒதுக்குகிறார். அது உங்கள் மீது அவர் கொண்டு இருக்கும் நம்பிக்கையாகும். அரசின் பல்வேறு உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.

    காலை உணவு திட்டம் உங்களை கருத்தில் கொண்டு தான் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 80 மகளிருக்கு 35 சதவீதம் மாநிலத்தில் 40 லட்சம் கடன் உதவி வழங்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டு அவர்கள் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் . அரசு கொண்டுவரும் பல திட்டங்கள் உங்களது தேவையை உணர்ந்து தான் என்பதை அறிந்து கொள்வதுடன் அதனை செயல்படுத்தும் விதமாக பெண்கள் இருக்க வேண்டும் என்றார்.

    இந்த விழாவில் தமிழ்ச்செல்வி மகளிர் வட்டார இயக்குனர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • 1000 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்
    • வீராங்கனைக்கு நிதி உதவியும் வழங்கினார்.

    கன்னியாகுமரி :

    மாநில அளவிலான 37-வது இளையோர் தடகள போட்டியில் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி தனுஷா நீளம் தாண்டும் போட்டி மற்றும் 1000 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

    இவர் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள் ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு வாழ்த்துக் களையும், பாராட்டுக்களை யும் தெரிவித்தார். மேலும் அந்த வீராங்கனைக்கு நிதி உதவியும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ஜான் சன், மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், வார்டு செயலாளர் கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் துணை தலைவர் அரிகிருஷ்ண பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுந்தரபாண்டியபுரம் முன்னாள் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகசாமி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
    • ஆறுமுகசாமி குடும்பத்திற்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் முன்னாள் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகசாமி. இவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறி அவரது குடும்பத்திற்கு ரூ. 7 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.

    அப்போது பேரூர் செயலாளர் பண்டாரம், இளைஞரணி நிர்வாகி செல்வகுமார், முன்னாள் பேரூர் செயலாளர் சங்கரபாண்டியன், முன்னாள் பேரூர் அவைதலைவர் செல்லப்பா, ஒன்றிய பிரதிநிதி கணபதி நாடார், வார்டு செயலாளர்கள் சங்கரன், தங்கராஜ், பாலகிருஷ்ணன், கணேசன், அய்யப்பன், முத்துபில்டர், துரைமணி, ராமமூர்த்தி, கவுன்சிலர் சங்கர் பூதத்தான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×