என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு தனியார் மருத்துவமனை நிதி உதவி
- பள்ளி வளாகத்தில் இருந்த வகுப்பறை கட்டடம் பழுதடைந்து இருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.
- அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவியை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவக்குமார் வழங்கினார்.
பல்லடம் :
பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி கிழக்கு செயல்படுகிறது. இங்கு மாணவர்கள் 149 பேர் மாணவிகள் 135 பேர் உள்பட 284 பேர் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த வகுப்பறை கட்டடம் பழுதடைந்து இருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.
இதற்கிடையே அகற்றப்பட்ட கட்டடத்திற்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டடம் கட்ட பெற்றோர்கள் மற்றும் பச்சாபாளையம் பொதுமக்கள், நகர்மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தில் பள்ளி வகுப்பறைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவியை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவக்குமார், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதா மணி ராஜேந்திரகுமாரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் பாமிதா கயாஸ், ராஜசேகரன்,பாலகிருஷ்ணன், மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெகதீசன்,கவுஸ்பாஷா, பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம், உள்பட பலர் உடன் இருந்தனர்.






