என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தமிழ்நாட்டை சேர்ந்த 10 விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கிய துபே
    X

    தமிழ்நாட்டை சேர்ந்த 10 விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கிய துபே

    • தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உதவித்தொகை செய்து வருகிறது.
    • ஒருவருக்கு தலா 70 ஆயிரம் வீதம் 7 லட்சம் நிதியுதவி வழங்கினார் துபே.

    நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 39 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதல் 4 இடங்களில் குஜராத், டெல்லி, ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் உள்ளன. இந்த தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.

    சிஎஸ்கே இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 தோல்வி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதனால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எஞ்சிய 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 70 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார்.

    தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் வருடாந்திரம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உதவித்தொகை செய்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 10 வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள அந்த சங்கம் தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி அளிக்கிறது.

    அதன்படி தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TNSJA) விருதுகள் மற்றும் உதவித்தொகை விழாவில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஒருவருக்கு தலா 70 ஆயிரம் வீதம் உள்பட 7 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    இது குறித்து துபே கூறியதாவது:-

    சிஎஸ்கே அணி ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு சென்ற போது டாக்டர் பாபா அவர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்வது பற்றி சொன்னார். இது இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடியது. இந்த சிறிய உதவித்தொகை அவர்கள் நாட்டுக்காக பெரியளவு பாடுபடுவதற்கான உதவியைச் செய்யும்.

    என்று கூறினார்.

    Next Story
    ×